புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2016

உங்களால் நான், உங்களுக்காக நான் : ஜெயலலிதா பிரச்சாரம்


தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சி தொடருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழாவும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதான் பிரசார தொடக்க விழாவும் சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டார். போயஸ்கார்டன் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்ற தீவுத்திடல் வரையில் சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் குழுமியிருந்து முதல்வருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தீவுத்திடல் வந்தடைந்த முதல்வருக்கு அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் விழா மேடைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

’’தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நல்லாட்சி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு அமோக வெற்றியை அளித்தீர்கள். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நல்லாட்சி தொடருவதற்கு, நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

உங்களால் நான், உங்களுக்காக நான், உங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது தான் எனது தவவாழ்வு, ஒயாது உழைப்பது உங்களுக்கு உயர்வுக்காகவே என்ற முதல்வர் தமிழக மக்களின் மகிழ்ச்சியே எனது லட்சியம் என்றார்.

கடந்த திமுக ஆட்சியில் நிலவி வந்த மின்வெட்டை குறிப்பிட்ட முதல்வர், தற்போதைய ஆட்சியில் எங்கும், எப்போதும், எல்லாருக்கும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

மழை வெள்ளத்தின்போது இந்த அரசு ஒன்றுமே செயல்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த முதல்வர், மழைக் காலத்தில் அரசு செய்த பணிகளை பட்டியலிட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு பணிகளை பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பேசுவதற்கு இந்த ஒரு பொதுக்கூட்டம் போதாது’’ என்றார்.

ad

ad