புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் -ஜெய­ல­லிதா

இலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட
முன்­னேற்றக் கழ­கத்தின் தலை­வரும் தமி­ழக முதல்­வ­ரு­மான ஜெய­ல­லிதா தெரி­வித்­துள்ளார்.
திருச்­சியில் நேற்று முன்தினம் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
தனி ஈழம் எய்­திடும் வகையில் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். இலங்கை தமி­ழர்கள் மீது போர் குற்­றங்கள் மற்றும் இனப்படு­கொலை நிகழ்த்­தி­ய­வர்கள்
மீது, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறேன். இலங்கை தமி­ழர்கள் முழு சுதந்­திரம் மற்றும் சுய­ம­ரி­யா­தை­யுடன் வாழ்ந்­தி­டவும், தனி ஈழத்தை எய்­திடும் வகையிலும் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.
தமிழ் நாட்டில் முகாம்கள் மற்றும் முகாம்­க­ளுக்கு வெளியே உள்ள இலங்கை தமி­ழர்கள் பல ஆண்­டு­க­ளாக இங்கே வாழ்ந்து வரு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும், உத­வி­க­ளையும், அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழக அரசு அளித்து வரு­கி­றது. அக­தி­க­ளாக இங்கே வந்த இலங்கை தமி­ழர்­க­ளுக்கு பிறந்து இங்­கேயே கல்வி கற்­ற­வர்­களும் இருக்­கி­றார்கள்.
இவர்­க­ளை­யெல்லாம் இலங்­கைக்கு திருப்பி அனுப்­பிட மத்­திய அரசு முற்­பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தது எனது அரசு தான். இலங்­கையில் நிலை­மைகள் முற்­றிலும் சீர­டைந்து முழுப் பாது­காப்பு ஏற்­பட்ட பின்­னரே இங்­குள்ள இலங்கை தமி­ழர்­களின் விருப்­பத்தின் பேரி­லேயே அவர்கள் திருப்பி அனுப்­பப்­பட வேண்டும் என்­பது தான் எங்­க­ளது கொள்கை. இங்கே உள்ள இலங்கை தமி­ழர்கள் வேலை வாய்ப்­பு­களை எளிதில் பெரும் வகையில் அவர்­க­ளுக்கு இரட்டை குடி­யு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என மத்­திய அரசை வற்­பு­றுத்­துவோம்.
இலங்கை தமிழர் பிரச்­ச­னையில் பல கபட நாட­கங்­களை ஆடி இலங்கை தமி­ழ­ருக்கு தி.மு.க. துரோகம் இழைத்­துள்­ளது. பிரிட்டிஷ் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இலங்கை நாட்­டிற்கு விடு­தலை கிடைத்த பின்­னரும் அங்கு வசிக்கும் தமி­ழர்கள் சொந்த நாட்­டி­லேயே இரண்டாம் தர குடி­மக்­க­ளாக நடத்­தப்­பட்­டனர். எனவே தான், இலங்கை அரசின் அடக்­கு­மு­றை­களை எதிர்த்து 1980-களி­லி­ருந்து பல்­வேறு இலங்கை தமிழ் அமைப்­புகள் ‘சுயாட்சி அந்­தஸ்து”, ‘தனி ஈழம்’ என பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி போராடி வந்­தன.
2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை ஜனா­தி­ப­தி­யாக மகிந்த ராஜபக் ஷ பொறுப்­பேற்று கொண்டார். இங்கே தமிழ் நாட்டில் 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு தி.மு.க .தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்­றது. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன் 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்­கையில் ‘ஈழத் தமி­ழர்கள் அமைதி நிறைந்த நல்­வாழ்­வு­ரிமை பெறு­வ­தற்கு வழி காண உரிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும்’ என தி.மு.க .வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. ஆனால் அவர்கள் செய்­தது என்­னவோ இதற்கு எதிர்­ம­றை­யான செயல்­களைத் தான்.
திமுக அங்கம் வகித்த காங்­கிரஸ் தலை­மை­யி­லான மத்­திய ஆட்சி 2004 முதல் மத்­தி­யிலே நடை­பெற்று வந்­தது. இலங்­கையில் அமை­தியை ஏற்­ப­டுத்தும் போர்­வையில் தமி­ழர்கள் மீதான அடக்­கு­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன.
2008-ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இலங்கை இரா­ணு­வத்­தினர் 100 பேருக்கு ஹரி­யானா மாநி­லத்தில் இந்­திய ராணுவம் ரக­சி­ய­மான முறையில் போர் பயிற்சி அளித்­த­தா­கவும், இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அதி­ந­வீன ரேடார் கரு­விகள் மற்றும் பல்­வேறு வகை­யான ஆயு­தங்­களை இந்­திய அரசு வழங்­கி­ய­தா­கவும், இந்­திய ராணு­வத்தின் மூத்த அதி­கா­ரிகள் சிலர் இலங்கை சென்று வந்­த­தா­கவும் அப்­போது ஊட­கங்­களில் செய்­திகள் வந்­தன. இவை அனைத்தும் மத்­திய அரசில் அங்கம் வகித்த திமு­க-­விற்கு நன்கு தெரியும். இருப்­பினும், கரு­ணா­நிதி இதனைத் தடுக்க எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.
இந்­தி­யா­வி­ட­மி­ருந்து இரா­ணுவ உத­வி­களைப் பெற்றுக் கொண்ட இலங்கை, 2008-ஆம் ஆண்டு இறு­தி­யிலும், 2009-ஆம் ஆண்டு தொடக்­கத்­திலும் இலங்கை தமி­ழர்­களை கடு­மை­யாக தாக்க ஆரம்­பித்­தது.
இலங்­கையில் போர் நிறுத்­தத்தை ஏற்­ப­டுத்த இலங்கை அர­சுக்கு மத்­திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு காங்­கிரஸ் தலை­மை­யி­லான மத்­திய அரசு செவி சாய்க்­க­வில்லை எனில், மத்­திய அர­சுக்கு அளித்து வரும் ஆத­ர­வினை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்­போது பல முறை வற்­பு­றுத்­தினேன். ஆனால் இதை செய்­வ­தற்கு மனம் இல்­லாமல் எந்த நட­வ­டிக்­கை­யையும் கரு­ணா­நிதி எடுக்­க­வில்லை.
மக்­களை ஏமாற்றும் வித­மாக “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்­ட­மன்ற கட்சித் தலை­வர்கள் கூட்டம்”, “தமிழ்­நாடு சட்­ட­மன்றப் பேர­வையில் தீர்­மானம்”, “மனித சங்­கிலி போராட்டம்”, “பிர­த­ம­ருக்கு தந்தி”, “பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் ராஜி­னாமா” என்ற வெற்று அறி­விப்­பு­க­ளுடன் ராஜி­னாமாக் கடி­தங்­களை தானே பெற்று வைத்துக் கொண்­டது; “இறுதி எச்­ச­ரிக்கை” என்ற அறி­விப்பு என பல்­வேறு நாட­கங்­களை நடத்தி,
இறுதி நாட­க­மாக “போர் நிறுத்தம் ஏற்­படும் வரை உண்­ணா­வி­ரதம்” என்று அறி­வித்து கடற்­க­ரையில் 3 மணி நேரத்­திற்கும் குறை­வாக படுத்துக் கொண்டு உண்­ணா­வி­ரத நாட­கத்தை முடித்துக் கொண்டார். அவ்­வாறு முடிக்கும் போது, “விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டு விட்­டது” என்ற செய்­தியை ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்தார் . கரு­ணா­நிதி. போர் நிறுத்தம் ஏற்­பட்டு விட்­டது என்று இவ­ரது பேச்சைக் கேட்டு பதுங்கு குழி­களில் பதுங்­கி­யி­ருந்த அப்­பாவி இலங்கைத் தமி­ழர்கள் வெளியே வந்­தனர். இலங்கை ராணுவம் அவர்­களை கொத்து கொத்­தாக கொன்று குவித்­தது.
குண்டு மழைக்கு விலக்கு அளிக்­கப்­பட்ட பகு­திகள் மற்றும் மருத்­து­வ­ம­னைகள் மீதெல்லாம் கூட குண்­டுகள் வீசப்­பட்டு தமிழர் இனப் படு­கொலை நடத்­தப்­பட்­டது.
3 மணி நேரத்தில் உண்­ணா­வி­ர­தத்தை முடித்துக் கொண்ட கரு­ணா­நிதி, இலங்­கையில் தமி­ழர்­களின் மீதான போரை நிறுத்தி விட்­ட­தாக மத்­திய அரசு தனக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­தா­கவும், தான் அவ்­வாறு ஏமாற்­றப்­பட்டு விட்­ட­தா­கவும் சொல்லி வந்தார்.
உயிர் பிழைத்த தமி­ழர்கள் எவ்­வித வச­தியும் இல்­லாமல் இரா­ணுவ முகாம்­களில் கம்பி வேலி­க­ளுக்கு பின்னால் அடைத்து வைக்­கப்­பட்­டனர். தமிழர் பகு­தி­களில் சிங்­களர் குடி­யேற்றம் திட்­ட­மிட்டு நடை­பெற்­றது. ஆனால் அப்­போ­தைய ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி சார்பில் கரு­ணா­நி­தியின் மகள் கனி­மொழி உள்­ளிட்ட பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் இலங்­கைக்கு சென்று, அப்­போ­தைய இலங்கை ஜனா­தி­பதி ராஜபக் ஷ வுடன் விருந்­துண்டு பரிசுப் பொருட்­களை பெற்றுக் கொண்டு இந்­தியா திரும்பி, இலங்கை தமி­ழர்கள் எல்­லோரும் நல­மாக இருக்­கி­றார்கள் என ஒரு பொய்­யான தக­வலை வெளி­யிட்­டனர்.
சில மாதங்­க­ளுக்கு முன் இலங்கை வடக்கு மாகாண உறுப்­பி­ன­ரான அனந்தி சசி­தரன் இறுதிப் போர் உச்­ச­கட்­டத்தில் இருந்த 2009-ஆம் ஆண்­டுமே 16-ந் திகதி இரவு கரு­ணா­நி­தியின் மகள் கனி­மொ­ழி­யிடம், தனது கணவர் சசி­தரன் செய்மதி தொலை­பே­சியில் பேசி­ய­தா­கவும், அப்­போது கனி­மொழி, அவர்­களை சர­ண­டைந்து விடும்­ப­டியும், அவர்­க­ளது விடு­த­லைக்கு தாங்கள் உத்­த­ர­வாதம் தரு­வ­தா­கவும் சர்­வ­தேச அளவில் பேச்சு வார்த்தை நடப்­ப­தா­கவும் கூறி­யுள்ளார். அதை நம்­பியே சர­ண­டைந்த ஈழத் தமி­ழர்கள் பலரும் கொல்­லப்­பட்­டனர் அல்­லது காணாமல் போய் விட்­டனர் என்ற மிகப் பெரும் குற்­றச்­சாட்டை அவர் கூறி­யுள்ளார். இங்­குள்ள தமி­ழ­ருக்கு மட்­டு­மல்­லாமல் இலங்கை தமி­ழ­ருக்கும் இவ்­வாறு துரோகம் இழைத்­தவர் தான் கரு­ணா­நிதி.
திமு­க-வும், காங்­கி­ரஸும் சேர்ந்து இலங்கை தமி­ழர்கள் அழி­வுக்கு கார­ண­மாக இருந்து விட்டு, பின்னர் ஏற்­பட்ட ஏதோ பிரச்­ச­னையால் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்­திய அமைச்­ச­ர­வையில் இருந்தும், ஐக்­கிய முற்­போக்குக் கூட்­ட­ணி­யி­லி­ருந்தும் விலகி மத்­திய அர­சுக்கு அளித்து வந்த ஆத­ரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கரு­ணா­நிதி, “ஈழத் தமி­ழ­ருக்கு எந்த வகை­யிலும் பயன்­ப­டாத சூழ்­நி­லைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில், மத்­திய ஆட்­சியில் திரா­விட முன்­னேற்றக் கழகம் நீடிப்­பது தமிழ் இனத்­திற்கே இழைக்­கப்­படும் பெரும் தீமை” என்று கூறினார்.
காங்­கி­ஸுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், “கூடா நட்பு கேடில் முடியும்” என்­றெல்லாம் பேசி காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்த கரு­ணா­நிதி, தனது மகள் கனி­மொழி மாநி­லங்­க­ள­வையின் உறுப்­பினர் ஆக வேண்டும் என்­ப­தற்­காக காங்­கி­ரஸின் ஆத­ரவை கேட்டுப் பெற்­றவர் தான்.
பின்னர் பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது தனக்கு பயன்­பட மாட்­டார்கள் என்­பதால் காங்­கி­ரஸை வெட்டி விட்­டவர் தான் கரு­ணா­நிதி. தற்­போது காங்­கி­ர­ஸுடன் மீண்டும் கூட்­டணி வைத்­தி­ருக்­கிறார் . கரு­ணா­நிதி என்றால், 2013-ஆம் ஆண்டு காங்­கிரஸ் கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது வேறு கார­ணங்­க­ளுக்­காகத் தானே? இது போன்ற கபட நாட­கங்­களை எல்லாம் நடத்தி மக்­களை ஏமாற்றி விடலாம் என கரு­ணா­நிதி நினைத்தால் அது ஒரு போதும் நிறை­வே­றாது.
முந்­தைய மத்­திய காங்­கிரஸ் கூட்­டணி அரசில் அங்கம் வகித்த போதே, ஈழத் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு துணை போன கரு­ணா­நிதி, இப்­போ­தைய தேர்தல் அறிக்­கையில் சர்­வ­தேச விசா­ர­ணையை மேற்­கொள்ள இந்­திய அரசு உலக நாடு­களை வலி­யு­றுத்தி செயற்­ப­டுத்த வேண்­டு­மென தி.மு.க. மத்­திய அரசை தொடர்ந்து வலி­யு­றுத்தும் என்று கூறி­யி­ருப்­பதை நம்­பு­வ­தற்கு தமி­ழர்கள் ஒன்றும் ஏமா­ளிகள் அல்ல.
2011-ஆம் ஆண்டு எனது தலை­மை­யி­லான அ.தி.மு.க. ஆட்சி பொறுப்­பேற்ற பின், இலங்கை அரசின் மீது பொரு­ளா­தாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்­கையை நட்பு நாடு என்று சொல்­வதை இந்­திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கைப் போரின் போது போர்க் குற்­றங்கள் மற்றும் இனப் படு­கொ­லைகள் நிகழ்த்­தி­ய­வர்கள் மீது சுதந்­தி­ர­மான சர்­வ­தேச புலன் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்திட ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், இனப் படுகொலை செய்தவர்கள் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு மூலம் இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், பல்வேறு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் என்னால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் என்றார்.

ad

ad