புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

மீண்டும் அ தி மு க வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு


டைம்ஸ் நவ் - சி ஓட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அதிமுக 130 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கு 70 இடங்கள் கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 34 இடங்கள் கிடைக்கும். பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று டைம்ஸ் நவ் - சி ஓட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களை பெறும் என்றும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 7 இடங்களை பெறும் என்றும், அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்றும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 41 சதவீதமும், திமுகவுக்கு 40 சதவீதமும், பாஜகவுக்கு 5 சதவீதமும், பிற கட்சிகளுக்கு 14 சதவீதமும் ஆதரவு இருந்துள்ளது.

ஆனால், மார்ச் கடைசி வாரத்தில் அதிமுகவின் ஆதரவு 39 சதவீதமாகவும், திமுகவின் ஆதரவு 32 சதவீதமாகவும், பாஜகவின் ஆதரவு 4 சதவீதமாகவும் குறைந்துள்ளது. பிற கட்சிகளுக்கான ஆதரவு மட்டுமே 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ad

ad