புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதிஉறுதி

வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
உறுதியளித்துள்ளார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, விசாரணைகள் நடத்துவதற்குரிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது. போர்க்குற்ற விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, நேற்று இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஸ்டி முறை அவசியமானது என வடமாகாண சபையில் நிறைவேற்றிய பிரேரணை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, நாட்டை பிளவுபடுத்த மாட்டேன் என்று குறிப்பிட்டார். மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படும் பிரேரணைகள், முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமிழீழம் தான் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் பரப்புரைகளில் கூறி வருகின்றார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தமிழகத் தலைவர்கள் தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் தமிழகத் தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக தாக்கங்கள் எதுவும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ad

ad