புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2016

சொந்த ஊரில் வேட்புமனு தாக்கல் செய்த கலைஞர்


திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை  திருவாரூரில் தாக்கல் செய்தார் திமுக தலைவர் கலைஞர்.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியடும் கலைஞர், இன்று காலை 11 மணியளவில் காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சன்னதி தெருவிலுள்ள வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மதியம் 12.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு தெற்கு வீதியிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. முத்துமீனாட்சியிடம் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்து, அதற்கான உறுதிமொழியை படித்து கையெழுத்திட்டு பின்னர் அதற்கான படிவத்தினை வழங்கினார்.  

இவரை திருவாரூர் நகர்மன்றத்தின் துணைத் தலைவர் டி.செந்தில் முன்மொழிந்தார். மாற்று வேட்பாளராக திருவாரூர் முன்னாள் ஒன்றிய செயலாளர்  ஆர்.பி.சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது மனைவி ராசாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், மாவட்ட செயலாளர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்பு மனுதாக்கல் செய்த கலைஞர் அங்கிருந்து புறப்பட்டு சன்னதி தெரு வீட்டுக்கு சென்றார். மாலை தெற்குவீதியில் நடைபெறவுள்ள வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்

ad

ad