புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம்விபத்தில் போதகர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் விபத்துக்களானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபையின் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இலங்கை பெந்தகோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் மன்னார் தள்ளாடி பிரதேசத்தில் காணப்படும் விமானப்படை தளத்திலேயே விபத்துக்ககுள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விபத்தின் போது, தாவீது ராஜா(வயது-58) என்றே போதகரே உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பெந்தகோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான போதகர் தாவீது ராஜா தலைமையில் இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் ஆறு அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 9 பேர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நிலையில், இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் வைத்து குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பானமேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad