புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2016

ஜெயலலிதா அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம்: குஷ்பு பேச்சு

சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 வருடத்தில் ஜெயலலிதா மக்களை நேரடியாக சந்தித்தது கிடையாது. நல்லது, கெட்டது என எதற்கும் வந்தது கிடையாது. ஒரு ஹிட்லர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. சென்னையில் மழை வெள்ள பாதிப்பின்போது பார்வையிட வரவில்லை. அவருடைய தொகுதி ஆர்.கே.நகரில் கூட 10 நிமிஷம்தான் வந்தார். வேனில் இருந்து கூட இறங்கவில்லை. வேனில் இருந்தப்படியே வாக்காளப் பெருமக்களே என்று கூறினார். 

மக்களுடைய பிரச்சனை என்ன என்று கேட்கவில்லை. ஏனென்றால் சர்வாதிகார ஆட்சி. நான் செய்தது தான் சரி. மக்கள் என்னை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிட்டார்கள். நான் என்ன செய்தாலும் நீங்க தாங்கிதான் ஆகணும் என நினைக்கிறார்கள். அவங்க என்ன நினைக்கிறாங்க, சும்மாவா ஓட்டு போட்டீங்க, பணம் கொடுத்தோம், ஓட்டு போட்டீங்க, அப்ப நான் சொல்றத கேளுங்க என நினைக்கிறாங்க. மக்கள் என்ன அடிமைகளா. அவங்க கட்சியில எம்எல்ஏ, எம்பிக்கள் அடிமைகள் மாதிரி காலடில கிடக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் அப்படி இருக்க வேண்டும் என்று அவங்க ஆசைப்படுறாங்களா. அதற்கு நீங்கள் (மக்கள்) அனுமதிக்கலாமா. 

இந்த முறை 2016ல் அவங்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். போதும் உங்களோட அராஜகம். இனி இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மானம் மரியாதையோட வாழ ஆசைப்டுகிறோம். பணத்துக்காக நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்ல வேண்டும். 2011 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று ஜெயலலிதா சொல்கிறார். அப்படியென்றால் ஏன் உங்களுக்கு தோல்வி பயம் இருக்கிறது. இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பணத்துக்காக ஓட்டு போட மாட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம்.

எந்த விஷயத்திற்கும் அவர் வரவில்லை. மக்களுக்கு நன்மை செய்யவும் வரவில்லை. ஒரு பிரச்சனை வந்தால் வருவதில்லை. மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், 5 வருடத்தை விடுங்கள், சமீபத்தில் அவர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கண் எதிரே இரண்டு பேர் உயிரிழந்தார்களே, அன்று அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும், கடும் வெயிலில் கூட்டம் வேண்டாம். மாலையில் கூட்டம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்க வேண்டும். சொன்னாரா. மறுபடியும் ஒரு பிரச்சாரத்திற்கு சென்றார். அதில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பேசினார்

ad

ad