புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2016

பிரபலங்கள் மோதும் கடலூரில் கடும் போட்டி



முதல் முதலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிடுகிறார். அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில் கடலூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் திமுக சார்பில் கடலூரில் இள.புகழேந்தி போட்டியிடுகிறார். இவர் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். தொகுதியில் மிகவும் பிரபலமானவர்.

எம்.சி. சம்பத் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே நிலவுகிறது. 

சீமான் முதல் முதலாக களம் இறங்குவதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 3 வேட்பாளர்களும் பிரபலங்கள் என்பதால், கடலூரில் கடும் போட்டி நிலவுகிறது.

ad

ad