புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2016

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் ! புது வருட வாழ்த்துச் செய்தியில்- ஜேம்ஸ் பெர்ரி

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என பிரித்தானியாவின்
அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,
இப் புது வருடத்தில் ஐ. நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தமிழர்களின் நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் இராணுவ வெளியேற்றம் தொடர்பாக சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் பிரித்தானிய அரசும், தமிழ் மக்களும் வெறும் வாக்குறுதிகள் மட்டுமல்லாது அவை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 11-04-2016ஆம் திகதி திங்கள் அன்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடலில் கலந்து கொண்ட பிரித்தானியாவின் எதிர்க் கட்சித் தலைவர் திரு ஜெரேமி கொர்பின் (Jeremy Corbyn MP) அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
பிரித்தானியாவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் எழுப்பத்தொடங்கியுள்ளமை மிகுந்த கவனத்திற்குரியது.
ஒரு நாட்டின் ஆழும் கட்சியையும் எதிர்க் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தமிழர்கள் தொடர்பானதும் இலங்கை அரசுக்கு எதிரானதுமான இவ்வாறான வெளிப்படையான கருத்துகளுக்குப் பின்னால் புலம் பெயர் வாழும் தமிழ் அமைப்புக்களின் தீவிரமான அரசியல் செயற்பாடுகளே முக்கிய காரணமாக உள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் உருவாக்கப்பட்ட பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயற்ப்படும் அமைப்பாக தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு செயற்பட்டு வருகின்றது.
இவ் அமைப்பினூடாக பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக தமிழர்களின் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளை பிரித்தானியாவில் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் தொடர்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளின் தலைவர்களின் மத்தியில் தமிழர்கள் தொடர்பான கரிசனையையும் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச நாடுகளின் தலையீட்டின் முக்கியத்துவம் குறித்தும் தாக்கத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது.
பிரித்தானியா தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தொடர்ச்சியாக குரல் கொடுப்பதற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) மற்றும் British Tamil Conservatives (BTC), Tamils for Labour (TfL), Tamil friends of Lib dem (TfLibDem) போன்ற ஏனைய புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் செயற்ப்பாடுகள் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கு பற்றிய பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசினால் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமது கண்டனங்களை தெரிவித்ததுடன் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பாக பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்க்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறித்தியிருந்தனர்.
அண்மைக்காலமாக பல உலகத் தலைவர்கள் சர்வதேச விசாரணை மற்றும் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை தொடர்பான தமது ஆதரவினை வெளிப்படையாக வெளிப்படுத்துவது தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையினை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்விற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பிய பிரித்தானிய பிரதமர் சர்வதேச விசாரணை தொடர்பான தனது உறுதியான நிலைப்பட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்ததுடன்,
ஸ்பெயினிலுள்ள காடலோனியா மாநிலத்தின் சுதந்திரத்துக்கான ஒருமைப்பாட்டு அமைப்பினை (Catalan Solidarity for independence) உருவாக்கியவரான அல்போன்ஸ் லோபெஸ் டேன (Alfons Lopez Tena) அவர்கள் இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்க்கான அங்கீகாரமும் சுய நிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad