புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2016

தே மு தி கா ஐ மீண்டும் உடைத்த தி மு க

தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.
பார்த்திபன் உள்ளிட்ட பத்து மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தே.மு.தி.க சட்டமன்றக் கொறடா சந்திரகுமார், மேட்டூர் எம்.எல்.ஏ பார்த்திபன், எம்.எல்.ஏ சேகர் உள்பட ஐந்து எம்.எல்.ஏக்கள், பத்து மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நலக் கூட்டணியோடு கேப்டன் இணைந்ததால், கட்சியின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும். தொடக்கத்தில் இருந்தே தி.மு.கவோடு கூட்டணி அமையும் என இவர்கள் நம்பி வந்தனர். மீண்டும் வெற்றி பெற்று வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கட்சித் தலைமையிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டவர்கள், இவர்களை ஒருபொருட்டாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து, தே.மு.தி.கவில் இருந்து வெளியேறும் முடிவில் இவர்கள் உள்ளனர்.

இதனையடுத்து, சந்திரகுமார் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் தி.மு.கவில் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சட்டமன்றத் தேர்தலில், நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க என தனி டீம் ஒன்று, தி.மு.க அணியில் போட்டியிடவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அவர்கள். இந்தத் திடீர் தாக்குதலை தே.மு.தி.க தலைமை எதிர்பார்க்கவில்லை. சந்திரகுமார் அண்ட் கோவை சமரசப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்.


தி.மு.கவின் அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது.ரயில் மறியல் போராட்டம்: மாவட்ட எஸ்.பி.யிடம் வைகோ வாக்குவாதம்

ad

ad