புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2016

சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா

வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா படைகள் இன்னமும் 12,500 ஏக்கர் காணிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பிரித்தானி்ய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று முன்தினம் பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
”கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகள் சிலவற்றை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், இன்னும் அதிகளவிலான காணிகள் ஒப்படைக்க வேண்டியுள்ளன.
இதனை பிரித்தானியா வரவேற்கிறது. எனினும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, சிறிலங்கா அரசாங்கத்துடனான சந்திப்புகளில் காணிகளை மீள ஒப்படைப்பது குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தேன்.
அத்துடன், நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றவதற்கு, பிரித்தானியா உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.
காணிகளை மீள ஒப்படைப்பதை நாம் தொடர்ந்து ஊக்குவிப்பதுடன், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றி அதற்கு பிரித்தானியா உதவும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad