புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2016

தே.மு.தி.க.அலுவலகத்தில் வாசன்-மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜகாந்துடன் சந்திப்பு




தமிழக சட்டசபை தேர்த லில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-. எந்த அணியில் இடம்பெறும் என்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.த.மா.கா.வை கூட்டணி யில் சேர்க்க சம்மதித்த அ.தி.மு.க., அந்த கட்சிக்கு 8 தொகுதிகள்தான் தரப்படும் என்றது. அது மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதா, த.மா.கா.வையும் இரட்டை இலை சின்னத்தி லேயே போட்டியிட வேண் டும் என்ற நிபந்தனை விதித் தார்.

ஆனால் அதை வாசன் ஏற்கவில்லை. தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிடுவோம். மேலும் 25 முதல் 35 தொகுதிகள் வரை ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அ.தி.மு.க. சம்மதிக்காததால் அ.தி.மு.க.-த.மா.கா. இடையில் நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது.

த.மா.கா. நிலையை அறிந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வாசனை சேர்க்க முயற்சி செய்தார். த.மா.கா. கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தி.மு.க. அணியில் சேருவதற்கான கதவும் அடைக்கப்பட்டது.

இந்த நிலையில் த.மா.கா. தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா, தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், பா.ம.க. ஆகிய 3 அணிகளும் அழைத்தன.

 அதனை தொடர்ந்து த.மா.கா.,வை கூட்டணியில் இணைப்பது குறித்து, அக்கட்சி தலைவர் வாசனுடன், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மக்கள் நலக்கூட்டணி இயக்க தலைவர்கள் கோயம்பேடு வந்தனர் அவருடன் வாசனும் வந்தார். தே.மு.தி.க., அலுவலகத்தில் விஜயகாந்தை 5 பேரும் சந்தித்து பேசி வருகின்றனர்.

விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad