புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016

விஜய் மல்லையாவை சர்வதேச அளவில தேடும் நபராக அறிவிக்க சிபிஐக்கு அமலாக்கத்துறை கடிதம்



தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. 

வங்கிகளில் பெற்ற கடன் 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாத வழக்கில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் ஏற்கனவே தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. 

பிரிட்னில் உள்ள விஜய் மல்லையாவை விசாரணைக்காக இந்தியா கொண்டுவர உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதுதவிர விஜய் மல்லையாவை சர்வதேச அளவில தேடும் நபராக அறிவிக்க இண்டர்போலை அணுகும் நோக்கத்துடன் சிபிஐக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

இந்த நிலையில் அமலாக்கத்துறை கோரிக்கை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் இதனை தெரிவித்தார். 

ad

ad