புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2016

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்!' - தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெ. அறிவிப்பு!

ட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று
மாலை சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அ.திமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
டைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த 4-ம் தேதி அறிவித்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து,  தான் பிரசாரம் செய்ய இருக்கும் தேதி விவரத்தையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டார்.

அதன்படி, இன்று (9-ம் தேதி) தேர்தல் பிரசாரத்தை  தொடங்கும் ஜெயலலிதா, அடுத்த மாதம் (மே) 12-ம் தேதி வேலூர் முடிக்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை சுமார் மாலை 6.05 மணி அளவில், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தீவுத்திடலுக்கு ஜெயலலிதா புறப்பட்டார்.
அங்கிருந்து தீவுத்திடலுக்கு வந்த ஜெயலலிதா, பிரசார மேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தபடியே தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார்.அப்போது பேசிய அவர்,  தனது வாழ்வு மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது என்றும், மக்களால் நான்... மக்களுக்காக நான் என்றும் கூறினார்.
ஜெயலலிதா பேச்சின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* அ.திமுக அரசின் திட்டங்களால் ஏழைகள் அதிக பயன் பெற்றுள்ளனர். சாதனைகள் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்
* கல்வி, வேலைவாய்ப்பு, மின்சாரம் போன்ற முக்கிய துறைகள் மேம்பாட்டால் தமிழகம் நிலைநிமிர்ந்துள்ளது
* தமிழர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான வழிகளை அ.திமுக அரசு உருவாக்கியுள்ளது
*  2011ல் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன
* குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்
* மக்களால் நான், மக்களுக்காகவே நான்;  என்னுடைய வாழ்வு மக்களுக்காகவே
* தமிழக பெண்களுக்கு ஊன்றுகோலாக இருப்பது அ.திமு.க. அரசு
* தமிழகத்தை தலைநிமிரச் செய்வதுதான் அதிமுகவின் லட்சியம்
* தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது
* * முந்தைய திமுக ஆட்சியில் 15 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது தடையில்லா மின்சாரம் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
படிப்படியாக மதுவிலக்குஅமல் 
மதுவிலக்குக்கான கோரிக்கை தற்போது தமிழக அரசியலில் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்றைய பிரசாரத்தில் அதுகுறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், " மதுவிலக்கு குறித்து தற்போது பலரும் பேசுகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியும் அதுபற்றி பேசுகிறார். வேறு யார் வேண்டுமானாலும் கூட மதுவிலக்கு பற்றி பேசலாம். ஆனால் கருணாநிதிக்கு அதுபற்றி பேச தகுதி இல்லை. மதுவை பற்றி ஒரு தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. கள்ளுக்கடையை திறப்பதை நியாயப்படுத்தியவர் கருணாநிதி.
மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் எனது நெஞ்சார்ந்த குறிக்கோள்.
ரூ.2300 கோடி இழப்பை ஏற்று மலிவு விலை மதுவை ஒழித்தது அதிமுக அரசு. தோல்வி அடைந்துவிடுவோம் என அறிந்தே அரசியல் காரணங்களுக்காக மதுவிலக்கு குறித்து கருணாநிதி பேசுகிறார். மதுவிலக்கு குறித்து தீவிரமாக ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்பதால் அதுகுறித்து பேசாமல் இருந்தேன்.
அ.திமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுவிலக்கை ஒரே கையெழுத்தில், ஒரே நாளில் கொண்டு வந்துவிட முடியாது. டாஸ்மாக் கடைகளின் நேரமும், எண்ணிக்கையும் குறைக்கப்படும். பார்கள் படிப்படியாக மூடப்படும்.மது பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.
வேட்பாளர்கள் அறிமுகம்
உரையை நிறைவு செய்த பின்னர்,   பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்காகவும், ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் தமக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ad

ad