புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! உருகிய இரட்டை மெழுகுவர்த்தி

பேச்சினால் தமிழக மக்களை ஈர்த்த திமுக கட்சிதான் இன்று தமிழக மக்களைக் குழப்பங்கள் குளறுபடிகள் ஊழல் குடும்ப அரசியல் புதிருக்குள் புதிர்
புதைய ஏமாற்றிப் பல்லாண்டுகளாகச் சாணக்கிய வஞ்சகத்தால் பிழைப்பு நடத்துகின்றனர் என்பார்கள்.
மனந்தளராமல் உறுதியோடு போராடி வெல்லும் பேச்சுக் கலை ஒரு விதத்தில் ஆழமாக வேரூண்டி வளர்த்தவர்கள் தி.மு.க சார்ந்தவர்கள்தான்.
சீமானின் பேச்சில் உண்மையும் நேர்மையும் சார்ந்து ஈழவிடுதலைப் போர்முழக்கம் எதிரொலிக்கக் கேட்டு இளைஞர் படை திரண்டெழுந்து நிற்பதும் இந்தக் குரல்தான்.
ராஜாஜி, பக்தவத்சலம், காமராசர், அண்ணா இவர்களுக்குப் பின்.. யார் மனதையும் காயப்படுத்திப் பேசாத அரசியல்வாதிகள் யாருமில்லை. இன்று எல்லாரும் தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகின்றார்கள். இதில் நின்று சீமானும் விதிவிலக்கல்ல.
சீமானின் கனல் பறந்த பேச்சை இன்று உலகம் முழுதும் வாழும் இளைஞர்கள் கேட்பது அதிகம். சீமான் முன்னர் முறை கேடாகப் பேசிய பேச்சுக்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு, மாறுபட்டு சுயநலத்தில் சுருங்கிவிட்டது. இன்று பொதுநல உச்சரிப்பில் மாறித் தொனிப்பதும் உண்மைதான்.
இன்று இறுக்கமான இயம்புதல் இல்லாத பக்குவநிலை சீமானிடம் வந்துவிட்டது. விமசகர்கள் கூற்றுக் களும் விபரமானவை என்பதான விளக்கத்தை ஏற்றுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதும் தப்பில்லை.
அண்ணா, கலைஞர், நாவலர், நாஞ்சில் மனோகரன், சம்பத், வைகோ இவர்களின் பேச்சை மட்டுமல்ல தமிழ் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் இன்று சீமானின் குரலைக் கேட்டு நாம்தமிழர் வெற்றி நிச்சயம் என்று தோள் தட்டுவதைக் காணலாம்.
நிச்சயம் வெற்றியத் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை என்கிற்றார்கள்.
இருந்தாலும் சீமான் கூறிவரும் கருத்துக்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நேர்மை சத்தியம் வீரத்துடன் நாம் தமிழர் கட்சியை இணைத்து அதிகம் பேசுவதாலும் எழும் எதிர்ப்புக்களும் பரவலாக கிடந்தடிக்க விபரம் அறியாது கலந்தடிக்கும் விமர்சனங்களும் உண்டு.
இரண்டு திராவிடக் கட்சிகளையும் கோட்டை நாற்காலியில் அமரவிடாது. வீட்டுக்கு அனுப்பத் துடிக்கும் சீமான் பேச்சில் புரட்சிப் பாவலர் கவிதைகளை அடிக்கடி விளாசித் தள்ளுகிறரர்.
குயில் ஏட்டில் பாரதிதாசன் அதிகம் திராவிடர் நிலைப்பாட்டை வலியுறுத்திக் கவிதைகள் பாடியிருப்பதை மறந்தா பேசுகிறார்?
திராவிட இயக்கங்கள் அழியும் என்றால் உணர்சிக் குரலுக்கு உகந்தது தமிழழுக்கு அது அறியாமையின் குழப்பம்.
உதாரணத்திற்கு திராவிடர் கழகம் என்பது தமிழினத்தின் உளப்பாங்கின் மறுபெயர் பெரியார் செயற்கரியது செய்தார் என்றால் அவர் திராவிடர் கழகத்தைச் செய்தருளினார் என்பதுதான்.
சீமான் 24.02.1958 குயில் இதழில், “தொண்டுக்கு ஏற்ற இடம் திராவிடர் கழகம்தான்”என்றதலைப்பிட்டு பாவேந்தர் எழுதியது அதிகம்.. எவராகயிருந்தாலும் சீமான் பதிவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தை ஊழல் அற்றபாதையில் கொண்டுசெல்லும் நல்லெண்ணம் கொண்டு நேர்வழி முற்போக்கு சக்திகளும் ஒன்றாக இணைந்த இலட்சியத்திற்கா பாடுபடுவேன் என்ற குறிக்கோளுடன் 224 வேட்பாளர்களைக் களமிறக்கி இருக்கும் துணிவு தலைவர் பிரபாகரன் துணிவு வீரம் கொள்கை விடாமுயற்சி உறுதியின் நம்பிக்கை கொண்ட வேட்கைதான் களமிறக்கத்தைக் காண்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகள் மீதும் இயக்கத்தின் கொள்கையுடன் மேதகு பிரபாகரனைத் தலைவராகக் கொண்டவர்.
மாவீரர்கள் தலைவனிடம் தலைவணங்கி விடைபெறும் தம்பிகளின் தளராத வார்த்தை பிரயோகங்களைச் சீமான் அறிந்துதான் கனல் பறக்கப் பேசுகிறார் என்பதையும் சிலர் ஏற்கமறுப்பதும் நிலவுகிறது.
உணர்ச்சிமமான பேச்சில் தரக்குறைவும் அறியாமைக் குழப்பமும் தொணித்தல் ஆரோக்கியமானதல்ல.
சீமானின் பேச்சில் இன்று காலத்தையும் கவனத்தையும் நிதானிக்கின்ற குரல் இப்போது சிறந்து விளங்குவதை அவதானிக்கலாம்.
தேர்தல் நெருங்கும் போது ஏற்பட்ட இந்த மாற்றும் வெற்றியின் நிச்சயத்தை நிர்ணயம் செய்வதைக் காட்டுகிறது.
சளைக்காத போராட்டத்தின் வெற்றியத் தூக்கி மே. 19.நிறுத்தும் பெருமிதம் நிச்சயமாக நிதர்சனம்.
கவியரசு வைரமுத்து புத்தக வெளியீட்டு மேடையில் சீமான் பேசிய இலக்கியப் பேச்சைப் பாராட்டிப் பேசினார்.
இனிவரும் புத்தக வெளியீடுகளில் சீமானை நூல் வெளியீட்டில் பேசுவதற்கு கட்டாயமாக அழைக்க வேண்டும் பேச்சு நடையில் இலக்கிய ஆளுமை உயர்வாக இருந்த எடுத்துக் காட்டுகளும் சிறப்பாக இருந்த காரணத்தினால் என்றவர் வாழ்த்திப் பேசியுள்ளார்.
அத்துடன் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு காலத்தே நின்றுநிலவும் செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது.
பலர் வரைவைக் களவாடும் நிலையும் ஏற்படும்.
ஈழத்தமிழன் சீமானிடம் தலைவன் வழி நின்றாடும் ரோசமும் நேசமும் இணைந்து கிடக்கும் வீரமாய்க் காண்கின்றான்.
இளைஞர் படை அணிசேர்ந்து அலையெனத் திரண்டு மலையெனக் குவிந்திடும் ஆதரவுதான் என்பது மெய்யாகிவிட்டது.
உலமெங்கும் வாழும் ஈழத்தமிழன் சீமானின் கொள்கை முழக்கத்தை மட்டுமல்லாது நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவு வெளியீட்டையும் போற்றிப் புகழ்ந்து தலைமேல் வைத்தாடுகின்றார்கள்.
“இந்த வேளையிலும் மேடைப் பேச்சுக்கள் எல்லாம் வாக்குறுதிகள்” என்பதையும் சீமான் மறந்துவிடக் கூடாது.
கடந்த பேச்சுக்களை மீட்டிப் பார்த்தால் உண்மைகள் கூடிவந்து உலுப்பும். முன்னர் இப்படி ஏன் பேசினேன் என்பதான வெறுப்பும் விறாண்டி விரைவைத் தளர்வடையச் செய்துவிடும்.
எதிராக நின்று பேசுகின்றவன் பலதரப்பட்ட அட்டகாசங்களைத் தூண்டிவிட்டு குழப்படி நடவடிக்கைக்காக பலரைக் கொண்டு தகராறுகள் பண்ணும் பாணியக் கையாள்வார்கள்.
எதிரிகள் கூட்டணிக் கட்சிகளிலிருந்து அதிகம் கிளம்பிவிட்டனர். எதிர்ப்புத்தான் உறுதியின் வெற்றிக்குச் சிறப்பு
உதாணத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவையும் கட்சிச் சின்னத்தையும் காட்டி.. “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்”என்று கூறிய வார்த்தையை எப்படி மறக்கமுடியும்?
இப்பவும் சீமானின் வீச்சான குரலை பல இணையத்தளங்கள் நகைச்சுiவாயாக நையாண்டி பண்ணுவதைக் கேட்கின்றோம்.
மனந்தளராமல் போராடி வெல்லும் பேச்சுக் கலை சீமான் குரலில் இன்று போற்றப்படுகிறது.
பேச்சுக் கலையை ஆழமாக வேரூண்ட வளர்த்தவர்கள் தி.மு.க காரர்கள்தான் அவர்கள் சாயல் சாரத ஒருமாற்றம் மாற்றம் காணத் துடிக்கும் சீமான் பேச்சில் ஈழத்தமிழன் வீரம் தலைவன் கொள்கை உறுதி தென்படுவதும் சீமானிடம் இருந்து வருகிறது என்றும் பேசித்திரிகின்றார்கள்.
வானிலிருந்து திடிரென விழுந்ததல்ல மண்ணிலிருந்துதான் உண்மையாகத் தொனித்த நெருக்கமான நேசிப்புடன் “முதலமைச்சர் ஜெயலலிதா” குரல் “தனித்தமிழ் ஈழம் அமைய உதவுவேன்.
சுதந்திரமாகவும் தன்மானத்துடனும்.வாழத் தொடர்ந்தும் பாடுபடுவதாகவும்” தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவேன் என்று அறிவித்துள்ளதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன் என்றார் பழ.நெடுமாறன்.24.04.2016
சீமான் மட்டில் என்ன கருத்து வெடியாக வரும் பதில் குரல் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேச்சில் மாற்றம் சீமானிடம் விழத் தொடங்கி விட்டது ஈழக்கவிஞன் போற்றுவதும் இதுதான் ”கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”.
நாட்டுப் பற்றாளரை மொழி வழிப் பற்றாளரை நாட்டு மக்கள்தான் போற்றவேண்டும். சீமான் முன்பு உயர்த்திய குரலை நல்லதென்றவர்கள் இன்றெதற்கு முட்டித் தகராறு பண்ணுவான்? கனவான்கள் இப்பயேன் கவுட்டுவிடத் துடிக்கிறார்கள்.
இதைத்தான் முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டேன் தேர்தல் மேடையில் பேசுபவர்களுக்கு “நாவடக்கம்” தேவை என்று ஆலோசனை கூறினேன்
சீமான் குரல் சாணக்கியம் தேர்ந்த குரலாய் பிரச்சினைகளைப் பெருக்கிக் கொள்ளாத ஏதிர்கால நலத்திட்ட நல்லுரையாக,
பொல்லாப்பை விலத்தி நல்லாட்சி அமையக் கோட்டை நாற்காலியில் நாம்தமிழர் கட்சி அமரும் அறிவார்ந்த பேரூரையாகத் தெளிவாகக் குரல் வருவதைக் கேட்டு, வெற்றியத் தரும் நம்பிக்கை பிறந்துவிட்டது இன்றைய தலைமுறை வரவேற்கும்.
வெற்றியை நாளை போற்றும்.
கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்
m.g.christian01@gmail.com

ad

ad