புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2016

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்த நீதவான்!



புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள்
தொடர்பில், நீதிமன்றத்தில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும். அதனைவிடுத்து, வெளி நிறுவனங்களுக்குச் சென்று கருத்துக்களை தெரிவிக்க முடியாது. அவ்வாறு கருத்துத் தெரிவித்தால் அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்' என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்தார்.
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் 10 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு, இன்று திங்கட்கிழமை (11) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிவான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
சந்தேகநபர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கான பிரச்சினைகளையும் அசௌகரியங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதனைவிடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி, படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 10 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் 2 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad