புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

புலிகளும் ஆயுதங்களை ஒப்படைக்கலாம்:தண்டனை இல்லையாம் – பாதுகாப்பு அமைச்சு

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பார்களாயின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொது
மன்னிப்புக்காலத்தில்அவற்றையும்ஒப்படைக்கலாமென்றும் தண்டனை வழங்கப்படுமென அவர்கள் அஞ்சத் தேவையில்லையெனவும் பாதுகாப்புச் செயலாளர்
கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும்தெரிவிக்கையில்-
‘சட்டவிரோத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான பொதுமன்னிப்புக் காலமாக இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம்6ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலகட்டத்தினுள்தம்மிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நபர்கள்
தண்டம் அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.அதேபோல் அவ்வாறு ஒப்படைக்கும் நபர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்.
குறிப்பாக சன்னத் துப்பாக்கி அல்லது அதற்கு சமமான தீ ஆயுதங்களுக்காக 5000ரூபாவும் பிஸ்டல் ரிவோல்வருக்கு 10,000 ரூபாவும் ரி 56 வகையிலான தீஆயுதத்திற்காக 25,000 ரூபா பணமும் வழங்கப்படும்.
மேலும் குறித்த காலத்தினுள் பொதுமன்னிப்பு வழங்குவதைப் போலவேநிர்ணயிக்கப்பட்ட கால எல்லை முடிவடைந்த பின்னர் மீண்டும் பாரிய தேடுதல்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறு தேடுதலின் போது சட்டவிரோதஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுமானால் அவர்களுக்கு எதிராக கடும் தண்டனைவழங்கப்படும். நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை உரிய வகையில்கையாள்வதே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பாகும். அந்த பொறுப்பை நாம்மிகச் சரியாக மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே தேசிய பாதுகாப்பை சீரழிக்கும்எந்தவித நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.நாட்டில் தற்போது காணப்படும் சூழலில் தனிப்பட்ட ரீதியில் ஆயுதங்கள்வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாருக்கும் பாதுகாப்புஅச்சுறுத்தல் இருக்குமாயின் அவர்கள் உரிய முறையில் பாதுகாப்புஅமைச்சிடம் கோரிக்கை விடுக்கும்போது அதுகுறித்து தீர ஆராய்ந்து
அவர்களுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனபாதுகாப்பு அமைச்சில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நபர்களாகஇருந்தாலும் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும்அவர்களிடம் ஆயுதங்கள் இருக்குமாயின் அவற்றையும் உரிய காலத்தினுள்ஒப்படைக்க முடியும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்றோ அல்லதுதண்டனை அதிகமாக வழங்கப்படும் என்றோ அஞ்சவேண்டாம். குறித்த காலத்தினுள்
ஆயுதங்களை ஒப்படைத்தால் விடுதலைப் புலிகளுக்கும் பொது மன்னிப்புவழங்கப்படும். குறித்த காலத்தின் பின்னர் தேடுதலின் போது அவ்வாறுஆயுதங்களை கண்டெடுக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்குஉள்ளாக்கப்படுவார்கள்.
இன்றுவரை சுமார் 900 வரையான ஆயுதங்களே சட்டவிரோதமாக இருப்பதாகவே தகவல்கள்
தெரிவிக்கின்றன. எனினும் அவற்றில் 600 தொடக்கம் 700 வரையான ஆயுதங்களை
நாம் பறிமுதல் செய்துள்ளோம். எஞ்சியுள்ள 200 தொடக்கம் 300 வரையான
ஆயுதங்களே பறிமுதல் செய்யவேண்டியுள்ளது. அதற்காகவே இந்த கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

ad

ad