புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

மட்டு.பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்துக்கு இணக்கம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த அடிப்படையில் சவுதி அரேபிய நாட்டின் உம்முல் குரா பல்கலைகழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் தாஹா தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷனின் தலைவரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர்களுக்குமிடையில் கடந்த  சனிக்கிழமை சவுதி அரேபியா மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

சுமார் ஐந்து மணி நேரம் இடம்பெற்ற மேற்படி பேச்சு வார்த்தையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலே அமைக்கப்படயிருக்கும் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் தயாரித்து அதனை உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் உயர் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிப்பதற்கான முழுப் பொறுப்பையும் உம்முல் குரா பல்கலைக்கழகம் ஏற்றுள்ளது.அத்தோடு உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாஹா தலமையில் இதற்கென விசேட குழுவொன்றும் அமைக்கபட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை அடுத்து எதிர்காலத்தில் மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகமும் மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் இணைந்து செயற்படுவது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களும் ஆராயபட்டது என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
குறித்த சந்திப்பில் மக்கா உம்முல் குரா பல்கலைகழகத்தின் சார்பில் பேராசிரியர் தாஹா மற்றும் பேராசிரியர் கலாநிதி பைசல் முஅல்லிம் பேராசிரியர் கலாநிதி அப்துர் ரஹ்மான் சுலமி உட்பட பல பேராசிரியர்களும் மற்றும் ஹிறா பௌண்டேஷன் சார்பில் அதன் செயலாளர் நாயகம் அஷ்செய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ad

ad