புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

ரஜினிகாந்த், சானியா மிர்சா, டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்



 குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்த 112 பேர், நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 51 பேருக்கு மற்ற பத்ம விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட மீதமுள்ள 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் நடிகர் ரஜினிகாந்த்,  புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளும், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

ad

ad