புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வருதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவருடன் கிளிநொச்சியில் பல முறை சந்திப்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவரது போரிடும் திறனை அரசியலுக்கு மாற்றுமாறும் அவரிடம் கோரியதாக சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த இராணுவ பலம் காரணமாகவே 2000 ஆம் ஆண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் இணங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விடுதலைப் புலிகளின் தலைவரது கருத்துக்களுடன் தாம் இணங்கியதாகவும் அந்த பலத்தை அரசியலுக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

ad

ad