புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2016

அமெரிக்காவுக்கு தப்பியோடிய கோத்தபாய! கொழும்பு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை,
அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக, அவரை பார்ப்பதற்காக கோத்தபாய சென்றுள்ளதாக கொழும்பு ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வைத்து கோத்தபாயவை கைது செய்ய முடியாதென ஒரு சிலர் ஊடாக தகவல்களை அறிந்துகொண்டே கோத்தபாய அமெரிக்கா சென்றுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா நோக்கி செல்வதற்கு வேறு சில காரணங்கள் உள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
தாஜுடீனின் கொலை தொடர்பில் தகவல்களை மறைத்ததாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள நாரஹென்பிட்டிய பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவின் வாக்குமூலத்திற்கமைய, முன்னாள் சிரோஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு சட்டவிரோத உத்தரவை வழங்கியது அனுர சேனாநாயக சுமித் சம்பிக்க பெரேரா வாக்குமூலம் வழங்கியவுடன், அனுர சேனாநாயக தன்னை சட்டவிரோதமாக செயற்பட உத்தரவிட்டது யார் என வாக்குமூலம் வழங்குவதற்கு ஆயத்தமாகவுள்ளார்.
இதன்போது தாஜுடீன் கொலை மாத்திரமன்றி மேலும் பல சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உத்தரவிட்டது யார் என வாக்குமூலம் வழங்குவதன் ஊடாக, அனுர சேனாநாயக்க கோத்தபாய ராஜபக்சவை காட்டிகொடுத்து விடுவார் என்ற அச்சம் காரணமாகவே கோத்தபாய அமெரிக்காவுக்கு தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது.
எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்ட ஹைட்பார்க் பேரணியின் பின்னர் கோத்தபாய மற்றும் மஹிந்தவுக்கு இடையில் விரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை பதவி மஹிந்த ராஜபக்சவுக்கு அல்ல தனக்கு கிடைக்க வேண்டும் என்பதே கோத்தபாவின் எதிர்பார்ப்பாகும்.
கோத்தபாய முன் வருவதற்கு பசில் ராஜபக்சவுக்கு எவ்வித விருப்பமும் இல்லாத நிலையில் மஹிந்தவுக்கும் கோத்தபாய தலைவராக முன் வருவதில் இணக்கப்பாடுகள் இல்லை.
இதற்கமைய ஹைட்பார்க் பேரணிக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் குறித்த பேரணிக்கு பின்னர் கோத்தபாயவை தான் இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய அமெரிக்க நோக்கி செல்வதற்கு இந்த சம்பவமும் ஒரு காரணமாக இருக்கலாம் என ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் கோத்தபாயவை கைது செய்வதற்கான அவசியம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுமாயின், கோத்தபாய அமெரிக்காகவில் இருப்பது அதற்கு தடையாக அமையாதென அமெரிக்க இராஜதந்திர தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ad

ad