புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

இந்த நாடு இரண்டுபட அனுமதியோம் மைத்திரி ஏறாவூரில் முழக்கம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மைத்தியில் இன்று மட்டக்களப்பிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத் தொழிற்சாலையை இன்று மாலை திறந்து வைப்பதற்காக அவர் வருகை தந்திருந்தார்

இந்நிலையில் ஜனாதிபதி வருகைக்காக மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
வழமைக்கு மாறாக வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வீதிகளில் சென்றவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் ஜனாதிபதி வருகைதந்த அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கமராக்கள் பூட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டிருந்தன.
இதைவிட கல்குடா தொடக்கம் தன்னாமுனை வரையான பகுதிகள் அனைத்திலும் விசேட அதிரடிப்படையினரும் பொலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அண்மைய நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதியின் இன்றைய மட்டக்களப்பு விஜயத்தின் போது அவருக்கான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ad

ad