புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

நல்லாட்சியிலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தென்பகுதியில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஆராய்வதற்குச் சென்ற கிராம சேவகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன் நல்லாட்சி சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்து அரசாங்கம் தொடர்ந்து வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வருகின்றது.

கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அரசாங்கம் மக்களின் முயற்சிகளுக்கு பல்வேறு இடர்களை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதைத் தடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad