புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

நடேஷ்வரா கல்லூரிக்கு மாவை சேனாதிராஜா இன்று விஜயம்


யாழ்.வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரியை மீள ஆரம்பிப்பதுதொடர்பாக ஆராய்வதற்காக
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா குறித்த பாடசாலைக்கான விஐயம் ஒன்றை இன்றைய தினம் காலைமேற்கொண்டுள்ளார்.
கடந்த 23 வருடங்களாக இயங்காத நிலையில் இருந்த மேற்படி பாடசாலை கட ந்த மாதம்ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்தபாடசாலை 2 தவணை பரீட்சை காலத்தில் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில்அதற்கான முய ற்சிகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்றைய தினம் காலை 10.30 மணிக்குமாவை சேனாதிராஜா குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன்வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர். மற்றும் முன்னாள் வலி,வடக்கு பிரதேச சபைதவிசாளர் ஆகியோரும் செ ன்றிருந்தனர்.
இதன்போது பாடசாலையி ன் தேவைகள்குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராய்ந்தார்.
மேலும் பாடசாலையை மீளஆரம்பிப்பதற்காகபடையினர் மேற்கொண்டு வரும் துப்புரவு பணிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்பார்வையிட்டதுடன், மேற்படி பாடசாலை க்குச் செல்லும் காங்கேசன்துறை பிரதானவீதியில் உள்ள படையினரின் சோதனை சாவடியை அகற்றவேண்டும் என பொதுமக்கள் மற்றும்பாடசாலை சமூகம் விடுத்த கோரிக்கையை உரிய இடத்திற்கு கொண்டு செல்வோம் எனவும்நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கூறியுள்ளார்.

ad

ad