புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

சமஷ்டி தீர்வு ஸ்ரீலங்காவை பிளவு படுத்தாது ; விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.
விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகவியளாலர்களின் கேள்விகளுக்கு வடக்கு முதல்வர் பதில் அளித்தார்.
இதன் போது ஊடகவியளாலர் ஒருவர் ; அண்மையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் சிங்கள அரசியல் வாதிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார் அதற்கு முதல்வர்
தீர்மானம் என்பது  தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒருதீர்மானம் தான் எங்களின் தீர்மானம். கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தால் அதற்குரிய காரணங்களை அவர் கூறுவார்கள்.  நாம் ஒரு ஜனநாயக நாட்டில் உள்ளோம் ஆகவே எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு.
ஆனால் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும்  சமஸ்டி என்றால் பிரிவினை என்பதை  60வருடகாலமாக கூறிவந்திருக்கிறார்கள்; ஆனால் 1926ல் எஸ். டபிள்யு.  ஆர்.டி .பண்டாரநாயக்க அவர்கள் சமஸ்டி என்பது இலங்கைக்கு  உகந்தது என  அவர் குறிப்பிட்டிருக்கிறார். கண்டிய சங்கம் கூறும் போது; தமிழர்களுக்கு சமஸ்டியும் மேல்நாட்டு சிங்களவர்களுக்கும் கீழ் நாட்டு சிங்களவர்களுக்கும் வேறாக அலகுகளை கொடுத்து  சமஸ்டி முறையான தீர்மானம் தான் சிறந்தது என  அவர்கள் கூறீனார்கள்.
ஆகவே 1926ல் கூறினார்கள் 1946ல் கூறினார்கள்  இதைவிட்டு 1956 வரும் போது அவர்கள் சிங்களம் மட்டும் தான் என்ற ஒன்றை  கொண்டு வந்து விட்டார்கள்.
ஆகவே நாம் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்; சமஸ்டி என்பது நாட்டை  ஒருமித்து வைத்திருப்பதற்காக  நாங்கள் கூறும் ஒரு விடயமே ஒழிய;  நாட்டை பிரிப்பதற்காக அல்ல.
சிங்கள அரசியல் வாதிகள் மக்கள் மனதில்  சமஸ்டியை பிரிவினை என விதைத்ததன் காரணமாகவே  நாம் இப்படியான பிரச்சினையை  சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே இரண்டு கட்சிகளும் பரிசீலித்து உரிய தீர்மானத்தை எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் என கூறினார்.

ad

ad