புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2016

தீவுப்பகுதியை ஈ பி டி பி ஆதரவில் வைத்திருந்த வேலணைபிரதேசசெயலாளர்‬ மஞ்சுளா அதிரடியாக இடம்மாற்றம்

கடந்த வாரம் இடம்பெற்ற இரு சம்பவங்கள் பரபரப்பாய் பேசப்படுகிறன , இரண்டுமே பொதுவாக ஒரே நிகழ்வுடன் தொடர்புடையவை
. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலதிகமாக வேலணை பிரதேச செயலாளராக ( divisional secretary / ASSITANT GOVERNMENT AGENT ) கடைமையாற்றிய திருமதி . மஞ்சுளாதேவி சதீசன் மாவட்ட செயலாளர் ( G A ) நாகலிங்கம் வேதநாயகனால் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . ஆனாலும் சம்பந்தமேயில்லாமல் இவரது இடம்மாற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமென சில விசமிகளால் முகநூலிலும் , இணையத்தளங்களிலும் செய்திகள் பரப்பப்படுகின்றன . இது குறித்து நேற்று தமிழரசுக்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரிடம் தொடர்புகொண்டேன் . அவர்கள் இக்குற்றச்சாட்டினை முழுமையாக மறுத்ததோடு தாம் மாவட்ட அரச நிர்வாக விடயங்களில் தலையிடுவதில்லை எனவும் தெரிவித்தனர் . யாழில் கடமையாற்றிய திருமதி. சுகுணவதி தெய்வேந்திரன் வேலணை பிரதேச செயலாளராக பொறுப்பேற்றுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எனக்கு தெரியப்படுத்தினார் . கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் பிரதேச செயலகங்களில் எழுதுவினைஞர் விடயத்திலேயே டக்ளஸ் தேவானந்த தலையிட்டிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . & பலமாதங்களுக்கு முன்பு தீவுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது வழங்கப்பட்ட நிவாரணத்தில் பல லட்ச ரூபாய்கள் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகுழுவால் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட அரச அதிபர் வேதநாயகனுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்களுக்கு அமையவே இவ் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது . ‪#‎புத்தர்சிலை‬ - நயினாதீவு விகாராதிபதியினால் தன்னிச்சையாக கடலுக்கள் 62 உயர ஆக்கிரமிப்பு புத்தர் சிலை அமைக்க அத்திவாரம் போடப்படுகிறது . மாவட்ட செயலாளர் வேதநாயகன் அதிரடியாக இதற்கு தடை உத்தரவு பிறப்பித்தார் . இவ்விவகாரம் இவ்வார இலங்கை அரசியலில் ‪#‎HOT_TOPIC‬இதுவே ! கடல் வள , கரையோர பாதுகாப்பு திணைக்களம் இச்சிலை அமைப்புக்கு அனுமதியளிக்கவில்லை , இந்நிலையில் வேலணை பிரதேச செயலர் மஞ்சுளா இதற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது . பிரதேச செயலர் மஞ்சுளா இவ்வாறான பல பிழையான செயற்பாடுகளில் முன்பு ஈடுபட்டுள்ளார் . புங்குடுதீவு‪#‎குறிகாட்டுவான்‬ இறங்கதுறைப்பகுதியில் எமது மக்களுக்கு சொந்தமான காணிகளில் சிங்களவர் களுக்கு வியாபார கடைகள் உருவாக்கிக் கொடுக்கும் திட்டம் 2014 நவம்பரில் தடல்புடலாக ஆரம்பிக்கப்பட்டது , நயினாதீவு பிக்கு + அப்போது நிர்வாகத்திலிருந்த ஈபிடீபி தலைமையிலான வேலணை பிரதேச சபை + கோட்டாபயவின் கீழிருந்த நகர அபிவிருத்தி அதிகாரசபை (URBAN DEVELOPMENT AUTHORITY ) + வீதி அபிவிருத்தி அதிகாரசபை ( R D A ) என்பன கூட்டிணைந்து இந்த ஆக்கிரமிபினை மேற்கொண்டிருந்தனர் . அன்றொரு நாள் ( 2014 november ) நான் நயினாதீவுக்கு சென்று விட்டு அப்பகுதியால் வரும்போது தடல்புடலாக சிங்களவர்களுக்கு கடைகளை அமைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தனர் , பிரதேச செயலர் மஞ்சுளா , பொலிஸ் , UDA , RDA அதிகாரிகளென பெருமளவானோர் குழுமியிருந்தனர் . மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் - நான் தனி ஆளாய் எதிர்த்து நின்றேன் , ஆர்ப்பாட்டம் செய்தேன் , கேள்விகளை முன்வைத்தேன் - AGA மஞ்சுளா அவர்களிடம் கேட்டேன் இங்கே என்ன நடைபெறுகிறதென்று ? அவர் சொன்னார் தனக்கு இங்கே என்ன வரப்போகிறது என்று தெரியாதெனவும் இது கோட்டாபய சேரின் உத்தரவு என்பதாலேயே தான் அனுமதியளித்துள்ளதாக . நான் கேட்டேன் எமது பூர்வீக காணிகளில் மக்களுக்கு தெரியாமல் நுழைவதற்கு கோட்டாபய யாரென்று ? அப்போது என்னருகில் வந்த UDA பிரதம அதிகாரி சொன்னார் தம்பி இதிலே நாம் பயணிகள் வாகன தரிப்பிடமே அமைக்கப்போகிறோம் , இது உங்களுக்கானதே என்றார் ( ஆனால் கடைகளே அமைக்கப்பட்டதுடன் 50 க்கு மேற்பட்ட சிங்கள குடும்பங்களினையும் குறிகாட்டுவான் பகுதியில் குடியமர்த்தும் செயற்திட்டமும் பேரினவாதத்தினால் முன்னெடுக்கப்பட்டன , 2015 .ஜனவரி 8 க்கு பின்னர் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ) . எமக்கு தேவையானவற்றை நாமே அமைத்துக்கொள்வோம் நீங்கள் அமைத்து தரத்தேவையில்லையென நான் கூறியதுடன் . பின்னர் அங்கு நடைபெற்ற செயற்பாடுகளை புகைப்படமெடுத்தேன் , உடனேயே அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் மஞ்சுளாவும் ஏனைய அதிகாரிகளும் எனக்கெதிராக முறைப்பாடு செய்தனர் . அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரியும் ஆறு பொலிஸ்காரர்களும் வந்து என்னை சுற்றி வளைத்து நின்றனர் . என் மீது கொலை மிரட்டல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் என்னை தமது வாகனத்தில் ஊர்காவற்துறை தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறும் அழைத்தனர் . நான் சிரித்துக்கொண்டே கேட்டேன் என்ன ஆதாரமென ? பொலிஸ் அதிகாரி சொன்னார் நான் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் வார்த்தைகளாலும் , படம் எடுத்தும் மிரட்டியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் . இது அதி உயர் பாதுகாப்பு வலயமா ( high security zone ) என அவரிடம் கேட்டேன் , அவர் இல்லையென்றார் . உங்கள் மக்கள் ( சிங்களவர் ) இங்கே வருகிறார்கள் விதம் விதமாக படமெடுத்துசெல்கிறார்களே , இது நான் மண் தின்று வளர்ந்த பூமி அவர்களுக்கு உள்ள உரிமை எனக்கில்லையா என்று மீள வினவினேன் , அவர் முகத்தில் ஈயாடவில்லை . அத் தருணத்தில் பஸ் ஒன்றும் வந்தது , முடிந்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பாருங்கள் என்று கூறிவிட்டு அதில் ஏறிச் சென்றுவிட்டேன் . அன்றிலிருந்து நான் கொழும்பு செல்லும் வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் என்னை அச்சுறுத்தும் நோக்கில் ஊருக்குள் போகுமிடமெல்லாம் அலைந்து திரிந்தனர் . நமக்கும் அது நன்றாகவே சௌகரியமாகவே இருந்தது , ஏனெனில் பதவியில் இல்லாமலே + பணம் கொடுக்காமலேயே பாதுகாப்பு வழங்கினார்கள் அல்லவா எமது நிருபர் 

ad

ad