புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2016

யாழில் கோவிலில் வைத்து பூசகரும் மகனும் பரிதாப மரணம்!! நடந்தது என்ன

poosakatr makan
கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும்
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இதில் தந்தையான பாலசுப்பிரமணியக் குருக்கள் (வயது 62) மற்றும் அவரது மகனான சாந்தஸ்வரூபக் குருக்கள் (வயது 25) ஆகியோரே மரணம் அடைந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை வேளையில் தாம் பூசை செய்து வருகின்ற யாழ்.கந்தர் மடம் புகையிரத கடவைக்கு அண்மையில் உள்ள செம்பியன்தாழ்வு ஞானவைரவர் ஆலயத்தில் மேற்படி இருவரும் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில் மகன் குப்பைக்கு மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைக்க முயற்சித்து போது அவர் மீது மண்ணெண்ணெய் சிதறுண்டு தீ பரவியுள்ளது. அதை கண்ட தந்தை தீயை கட்டுப்படுத்த முயற்சித்த வேளை தீ அவர் மீதும் பரவியதில் இருவரும் கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் மரண விசார ணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படை க்க ப்பட்டுள்ளன.

ad

ad