“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
என்ற வள்ளுவனின் கூற்றுக்கு இணங்க, ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும்
பாதுகாப்பாக அமையும். நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே எங்களுடைய இந்த போட்டியின் நோக்கமாகும்.
கற்க கசடற – ௬ (6) ன் போட்டிகள் வட மேற்கு  லண்டனில் முதல் அரைசுற்றை தொடங்க  அதை தொடர்ந்து தென் மேற்கு , தென்கிழக்கு,  வடகிழக்கு,  ஆகிய  மூன்று இடங்களிலும் அரைச்சுற்று  இடம்பெற்றுது. வெளிமாவட்டத் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தடவை லண்டனிற்கு வெளியேயும் 5வது இடமாகவும் இடம்பெற்றது. அதிலிருந்து தெரிவான போட்டியாளர்கள் மத்தியில் இடம்பெற்ற போட்டி இறுதிச்சுற்றாக lewisham Sivan Koyil  மண்டபத்தில் இடம் பெற்றது.
IMG_0342IMG_0409IMG_0411IMG_0491IMG_0517IMG_0520IMG_0529IMG_0534IMG_0562IMG_0571IMG_0579IMG_6330IMG_6390IMG_6407IMG_6412IMG_6429IMG_6443IMG_6471IMG_6496
கேணல் கிட்டு அண்ணா தமிழீழம் நோக்கி வங்கக்கடல் வழியாகப் பயணம் செய்து கொண்டு இருக்கும் வேளை அக் கப்பலை வழிமறிக்கும்படி அன்றைய இந்திய அரசு கட்டளையிட்டது. கிட்டு அண்ணாவை உயிருடன் பிடிக்கவேண்டும் அலல்து அவரை அழிக்கவேண்டும், மேற்குலகின் சமாதான முயற்சியைக் குழப்ப வேண்டும் என அன்றைய இந்திய அரசாங்கம் முடிவெடுத்தது. சரணடையும் படியும் மறுத்தால் கப்பல் முழ்கடிகக்ப்படும் எனவும் இந்தியக் கடற்படை எச்சரித்தது. சரணடைந்தால் தம்மீது பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு தமது இயக்கம் மீதும், போராட்டம் மீதும் களங்கம் சுமத்த அன்றைய இந்திய அரசு முயற்சிக்கும் என்பதை உணர்ந்துகொண்ட கேணல் கிட்டு அண்ணா கப்பல் சிப்பந்திகள் அனைவரையும் கப்பலை விட்டு இறக்கியபின் கப்பலை வெடிக்கவைத்துத் தகர்த்து தன் தோழர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். பரிசளிப்பு நிகழ்வு தொடங்கும் முன்னர் இளையோர் அமைப்பின் உறுப்பினர்களால் கேணல் கிட்டு அண்ணாவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற தமிழ் இலக்கணநூல். அதன் மூன்றாவது  அதிகாரமாகிய   பொருளதிகாரம் தமிழ் மொழிக்கே உரிய சிறப்புடையது   என்பது   தமிழறிஞர் யாவரும் அறிவர். ஔவையார் எழுதிய ஆத்திசூடியும் போட்டியில் சேர்த்துக்கொள்ப்பட்டது.
இறுதி சுற்றி முடிவடைந்த நிலையில், போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, இனிதே நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் நடனம் , பாடல், பேச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டியாளர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நடுவர்கள் என அனைவரும் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை  கண்டு களித்தனர். கலைநிகழ்வுகள் முடிய  வெற்றி  பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற, இந்த போட்டி முயற்சியை வந்திருந்த பெற்றோர்கள், நண்பர்கள், நடுவர்கள் என எல்லோரும் பாராட்டும் விதமாக ஊக்கப்படுத்தி அவர்களது மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தனர்.
” இதில் இருக்கும் சரி பிழைகளை கடந்து, உங்கள் முயற்சி எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, உங்கள் முயற்சிகள் இன்னும் மேலும் வழர வேண்டும், வாழ்த்துக்கள்” என்று எமது நடுவர்களில் ஒருவரான திரு.ஆறுமுகம் அய்யா அவர்கள் தெரிவித்திருந்தார். பெற்றோர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததொடு, இது போன்ற நிகழ்வுகள் மேலும் வழர அறிவுரைகளையும் வழங்கி இருந்தனர்.
இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள்
UNDER 5 GROUP
3RD PLACE – NIVEDHA KUMAR
2ND PLACE – ELACKIAN SOORIYAPRAGASAM
1ST PLACE – NENUSHA KAJENDRAN
6-7 AGE GROUP
3RD  PLACE – KRISHNAJAN KATHIRKAMANATHAN
2ND PLACE – LUXMITHA INTHIRAN
1ST PLACE – VARUNAVY THAVAGANESH
8-9 AGE GROUP
3RD PLACE – SALINY SIVARASA
2ND PLACE – PRANAVY VIGNESWARAN
1ST PLACE – AAYAGI THAVARASAKUMARAN
10-12 AGE GROUP
3RD PLACE – ABIRAMI JEEVAKUMARAN
2ND PLACE – MEENATCHI THANASINGAM
1ST PLACE – JESHVIN JESUDAS
13-15 AGE GROUP
3RD PLACE – KIRUTHIGA ARIYAKUDDY
2ND PLACE – PUVITHA SRIVARATHAN
1ST PLACE – MITHUNA VIGNESWARAN