புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

கோப்பாய் வடக்கில் குருக்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் என்ன?

இரவானாலே உயிரைக் கையில் பிடிக்கும் வாழ்க்கை. என்ன நடக்குமென்றதற்கு உத்தரவாதமில்லை. கத்தி, வாளுடன் யாராவது வீடு புகுவார்கள்
என்ற பயத்துடன் உயிரைப்பிடித்துக் கொண்டுதான் வாழ்கிறோம்.
விடிந்ததும், சுகம் விசாரிப்பதைப் போல வீடு உடைக்கப்படவில்லையா என்றுதான் அயலவர்களிடம் விசாரிக்கிறோம்’
இது சினிமாவில் அல்லது கதைகளில் வரும் வசனமல்ல. யாழ்ப்பாணத்தின் ஒருபகுதி மக்களின் ஒட்டுமொத்த வாக்குமூலம். திருடர்களின் கோட்டையாக மாறிவிட்ட வலிகாமம் கிழக்கு பகுதிக்கு சென்ற நாம், அந்தப்பகுதி மக்களிடம் கேட்ட ஏகோபித்த குரல் இது.
வாழைக்குலை திருட்டில் தொடங்கி வீட்டுக்குள் புகுந்து வாயைக்கட்டிவிட்டு திருட்டு என அன்றாடம் வெளியாகும் செய்திகளே இதற்கு சாட்சி. யுத்தத்தின் பின்னர் போதைப்பொருள் பாவனையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பை போலவே, பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகளும் அதிகரித்தன. அவற்றில் ஒன்றுதான் திருடர்களின் அட்டகாசம். அன்றாடம் இப்படியான திருட்டுச் செய்திகளிற்காக இடம் ஒதுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் யாழிலுள்ள பத்திரிகைக்காரர்கள்.
ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்திலும் திருடர்களின் அட்டகாசம் உள்ளதுதான். முழித்திருக்க முழி தோண்டுபவர்கள் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமுள்ளன. நடமாடும் வியாபாரிகள் போல, விற்பனையாளர்கள் போல, வழிப்போக்கர்கள் போல வருபவர்கள் பரவலாக கைவரிசை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடு, சிறிய பொருட்கள் என அவர்களின் திருட்டுப்பட்டியல் நீள்கிறது.
இந்தவகையான திருடர்கள் ஒருவகையென்றால், மற்ற வகை மகா திருடர்கள். வாள்கள், கத்திகளுடன் வீடுடைத்து புகுந்து திருடுபவர்கள். இவர்கள்தான் தற்போது அச்சுறுத்தலானவர்களாக மாறியுள்ளனர். எதிர்ப்பவர்களை மிருகத்தனமாக தாக்கும் இந்த கும்பல் கொலைக்கும் அஞ்சாத பாதகர்கள். யாழில் திருடர்களால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலும் உள்ளது.
குடாநாட்டில் ஆங்காங்கே பரவலாக நடந்து வந்த இந்த கொள்ளைகள் இப்பொழுது வலிகாமம் கிழக்கில் மையம் கொண்டுவிட்டது. திருடர்களின் கோட்டையாக நமது பிரதேசம் மாறிவிட்டதா என்பதே அந்தப்பகுதி மக்களின் இன்றைய அங்கலாய்ப்பு.
இந்த வருடத்தில் மட்டும் வலிகாமம் கிழக்கில் சுமார் இருபது திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதென்கிறார்கள். கடந்த இரண்டு மாதமாக பொலிசாரின் நடவடிக்கைகள் முடுக்கிவிட்டதை தொடர்ந்துதான் திருடர்களின் கொட்டம் அடங்கியுள்ளது. முகத்தை கறுப்புத்துணியால் மூடிக் கொண்டு, பயங்கர ஆயதங்களுடன் வரும் திருடர்கள் வீடுஉடைத்து உள்நுழைந்து திருடுகிறார்கள். வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது அவர்களிற்கு பிரச்சனையில்லை.
முன்னர் ஒவ்வொரு வீடாக உடைத்த திருடர்கள், இப்பொழுது வரிசையாக பல வீடுகளை உடைக்க தொடங்கி விட்டனர். கோப்பாயில் அண்மையில் ஏழு வீடுகள் ஒரே இரவில் உடைக்கப்பட்டது. நீர்வேலியின் கரந்தாயில் ஒரே இரவில் ஆறு வீடுகள் உடைக்கப்பட்டன. அன்று மொத்தமாக 50 பவுண் நகை, 25 இலட்சம் ரூபா பணம் திருட்டு போனது.
கோப்பாய் பிராமணவோடையில் வசிக்கும் குருக்கள் ஒருவரின் வீட்டிலும் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த திருட்டுக்கும்பல் நீர்வேலியில் வரிசையாக ஆறுவீடுகளை உடைத்த பின்னர் இவரது வீட்டுக்கு சென்றுள்ளது. ஏற்கனவே உடைத்த வீடுகளில் எடுக்கப்பட்ட டோர்ச்லைட், கத்தி, கொட்டன் என்பவற்றுடனேயே குருக்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். திருடி முடிந்ததும் அவற்றை குருக்கள் வீட்டிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். பொலிசார் மீட்ட அந்த தடயப்பொருட்களை பின்னர் உரியவர்கள் அடையாளம் காட்டினார்கள்.
பல திருட்டு சம்பவங்கள் நடந்தபோதும் திருடர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் என்னவோ மிகக்குறைவுதான். இதுதான் திருட்டு தொழில் செய்பவர்களிற்கு உள்ள ஒரே நம்பிக்கை.
திருடர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் செல்வதையடுத்து நீர்வேலி பகுதி மக்கள் புதியவழியொன்றை கடைப்பிடிக்கிறார்கள். திருடர்கள் நடமாட்டத்தை அறிந்தால் உடனே பட்டாசு கொளுத்திப் போடுகிறார்கள். ஊர்மக்கள் உடனே திரள்வதால் திருட்டுக்களை முறியடிக்க முடிகிறது. அண்மையில் திருடர் கூட்டமொன்று அப்படி விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மக்கள் விழிப்புக்குழுக்களை அமைத்துள்ளனர். இரவுநேரங்களில் சிறுசிறு குழுக்களாக வீதியில் ரோந்து நடவடிக்கைகளை செய்கிறார்கள். இதுவும் நல்ல பலனை கொடுத்துள்ளது. விழிப்புகுழுக்கள் உள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருடர்களின் அச்சுறுத்தல் வலிகாமம் கிழக்கில் பல கிராமங்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது என்பதே உண்மை. திருடர் பற்றிய அச்சத்தில் ஒவ்வொரு இரவையும் நிம்மதியின்றி கழிக்கும் குடும்பங்கள் ஏராளம். சமூகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள திருட்டு கலாசாரத்திற்கு கறாரான நடவடிக்கைகள்தான் தீர்வாக அமையும்.
ப. குருநாதக்குருக்கள்
கோப்பாய்ija
குருநாதக்குருக்கள்கடந்த 19 ஆம் திகதி அதிகாலை ஒருமணி இருக்கும். வீட்டுக்கதவை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. நானும் மனைவியும் பெரிதாக கத்தி உதவி கேட்டோம். வெளி மின்விளக்குகளை ஒளிரவிட்டோம். அயல்வீட்டுக்காரர்களும் பயத்தால் உதவிக்கு வரவில்லை. அரைமணித்தியாலம் மினைக்கெட்டு கதவை உடைத்துக் கொண்டு நான்கு திருடர்கள் உள்ளே வந்தனர். முகத்தை மூடி கறுப்புத்துணி கட்டியிருந்தனர். நாங்கள் பெரிதாக கத்தினோம். கையிலிருந்த கொட்டனால் ஒருவன் எனக்கு ஓங்கி அடித்தான். நான் அப்படியே இருந்துவிட்டேன். இன்னொருவன் கத்தியை காட்டி மிரட்டி எனது மனைவி அணிந்திருந்த தாலி, சங்கிலி, காப்பு, மோதிரங்களை கழற்றி எடுத்தான்.
பிறகு ஒவ்வொரு அறையாக தேடுதல் நடத்தினார்கள். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா கோயில் பணத்தையும், எனது நகைகளையும் எடுத்தனர். மொத்தமாக அன்று பதினைந்து பவுண் நகைகளை எடுத்தனர்.
பின்னர் வெளி மின்விளக்குகளை அணைக்கச் சொன்னார்கள். சத்தம் போடக்கூடாதென மிரட்டி, வீட்டுகதவை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அதன் பின்னர்தான் அயலவர்கள் வந்தார்கள்.
சுபாஸ் மஞ்சுல ஹகந்தவெல
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிpolices ja
சுபாஸ் மஞ்சுல ககான்வெலகோப்பாய் நீர்வேலிப் பகுதியில் திருடர்களின் நடமாட்டத்தை இல்லாமல் செய்து இரண்டு மாதங்களாகிவிட்டன. திருடர்களை கட்டுப்படுத்த நிறைய நடவடிக்கைகள் எடுத்தோம். இரவுவேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் இளைஞர்களின் ஆளடையாளங்களை உறுதி செய்கிறோம். இரவுநேர ரோந்துகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் உடையிலும் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். கொள்ளையர்களை கைது செய்ய மோப்பநாயும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பகுதி திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரொருவரை தெல்லிப்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேர் கிளிநொச்சியில் மறைந்திருக்கின்றனர். அவர்களையும் விரைவில் கைது செய்வோம்.
மிகத் திட்டமிட்டே இந்த திருட்டுக்கள் நடக்கின்றன. கோப்பாய் பிராமணவோடை பகுதியில் உள்ள வீட்டுநாய்கள் அண்மையில் மர்மமான முறையில் இறந்தன. தொடர்ச்சியாக நாய்கள் மர்மமாக இறந்ததை தொடர்ந்தே, யாரோ விசமருந்து கொடுத்து நாய்களை கொல்வது தெரிந்தது. முதலில் நாய்களை கொன்றுவிட்டு, பின்னர் அந்தப்பகுதியில் கொள்ளைகள் நடந்துள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயங்களையும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். சில பிரதேசங்களில் திருடர்களே மின்இணைப்பை சேதப்படுத்தி திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
பகலில் நவநாகரிகமாக உடையுடுத்தி வீதிகளில் திரிந்து நோட்டம் விடுகிறார்கள். வயோதிபர்களின் வீடுகள், பெண்கள் அதிகமுள்ள வீடுகள், தனித்திருக்கும் வீடுகள், பிரதானவீதிகளிலிருந்து தொலைவில் உள்ள வீடுகள் இலக்கு வைக்கப்படுகின்றன.
நள்ளிரவிற்கு கிட்டவாக ஓடுபிரித்து, கதவுடைத்து உள்நுழைகிறார்கள். அல்லது, முன்னிரவில் வீட்டுக்காரர்கள் அசந்திருக்கும் சமயத்தில் உள்நுழைந்து பதுங்கியிருந்துவிட்டு, ஊரடங்கிய பின்னர் கைவரிசையை காட்டுகிறார்கள்.
திருடர்கள் வீட்டுக்குள் புக முயன்றாலோ, திருடர்கள் வந்துவிட்டதாக சந்தேகம் எழுந்தாலோ உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுங்கள்.
#19 அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.
#ருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்கள் குழுவாக செயற்படலாம். சங்கேத வார்த்தைகள், செயற்பாடுகள் வைத்துக் கொள்ளலாம். (உதாரணம்- பட்டாசு கொளுத்திப் போடுவது)
#கலில் வீடுகளிற்கு வரும் சந்தேகத்திற்கிடமானவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். வீட்டின் அமைப்பை அவர்கள் பார்க்க அனுமதிக்காதீர்கள்.
#யல்வீடுகளில் வித்தியாசமான சத்தம், நடமாட்டங்கள் தெரிந்தால் பக்கத்திலுள்ளவர்களையும் எச்சரித்து அங்கு சென்று பார்க்கலாம்.

ad

ad