புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறியுள்ளார்.

விருத்தாசலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா பேசுகையில், எனது தலைமையிலான அதிமுக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.
இப்போது அனைவரும் இந்த மதுவிலக்கு கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகிறார்கள். குறிப்பாக, திரு. கருணாநிதி மிகவும் அதிகமாக இதைப் பற்றிப் பேசுகிறார்.
யார் வேண்டுமானாலும் மதுவிலக்கு பற்றி பேசலாம். ஆனால், அதைப் பற்றிப் பேசுகின்ற அறுகதை திரு. கருணாநிதிக்கும் இல்லை; திமுக-வுக்கும் இல்லை.
தமிழ் நாட்டில் அமலில் இருந்த பூரண மதுவிலக்கை நீக்கியவரே திரு. கருணாநிதி தான். இதை பார்த்தால் எனக்கு ஒரு குட்டிக் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.
ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேறு ஒருவரை கொலை செய்துவிட்டார். சாவு ஏற்பட்டது. ஏதோ சில காரணங்களினால் அந்த இடத்தைவிட்டு இவர்களால் ஓட முடியவில்லை. அதான் கொலையாளியும், அவர் கூட்டாளிகளும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது, கொலை செய்யப்பட்டவரின் உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கே ஓடி வந்தனர். அய்யோ நண்பா நீ போய்விட்டாயா, அய்யோ மகனே நீ போய்விட்டாயா என்று மற்றவர்கள் கூக்குரலிட்டு அழுதுள்ளனர்.
அப்போது, இந்தக் கொலையாளியும், அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யோ நண்பா நீ போய்விட்டாயா என்று கதறி, அழுது ஒப்பாரி வைத்தார்களாம். அது போல இருக்கிறது கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது என கூறியுள்ளார்.

ad

ad