புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2016

பனாமா ஆவண கசிவு! பிரித்தானிய பிரதமரும் சிக்கினார்


வரி ஏய்ப்பு மற்றும் கடல் கடந்து சொத்து சேகரிப்பு தொடர்பில் பனாமா பேப்பர்ஸ் எனும் ஆவண கசிவினால் உலக நாட்டுத் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த ஆவணக் கசிவின் காரணமாக பல நாட்டு அரச தலைவர்கள் பதவி துறக்க வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலைக்குள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கம்ரூனும் சிக்கியுள்ளார்.
அவர் கடல் கடந்து முதலீடுகளை மேற்கொண்டதாக ஏற்றுக் கொண்டுள்ளார். தனது தந்தையின் நிறுவனத்தின் ஊடாக 30000 பெறுமதியான பவுண்டுகளை வெளிநாடுகளில் பேணியதாக கமரூன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு பிரித்தானியாவின் பிரதமராக பதவி பிரமாணம் ஏற்றுக் கொள்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்கை விற்பனை செய்துவிட்டேன் என ITV தொலைக்காட்சி நிறுவனத்திற்கு  வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Blairmore Holdings Inc. நிறுவனத்தில் 30,000 பவுண்ட்கள் பெறுமதியான 5,000 பங்குகளை எனது மற்றும் மனைவியின் பெயரில் கொண்டிருந்தோம், இவை அனைத்தும் கடந்த 2010-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதற்கான வரியும் செலுத்தியுள்ளோம் என பிரித்தானிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பல ஆயிரம் கோடி இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் உலக நாடுகளின் பிரபலங்கள் மற்றும் 140 அரசியல் தலைவர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.
இதேவேளை பனாமா ஆவண கசிவினால் ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad