புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

முதலமைச்சராக ஜெயலலிதா வருவதற்கு விஜயகாந்த் ஆதரவு கொடுக்கிறார்: சந்திரகுமார் பேட்டி

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்திரகுமார் பதில் அளித்தார்.

கேள்வி: மறுமலர்ச்சி தேமுதிக என்று ஒரு புதிய கட்சி தொடங்குவதாக செய்தி வருகிறதே?

பதில்: நேற்று நீங்கள் கேட்கும்போது தெளிவாக சொன்னேன். தலைவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிவிட்டுதான் சென்றோம். இன்னும் அந்த நம்பிக்கையை நான் கைவிடவில்லை. நாங்கள் 10 பேர் இங்கே இருக்கிறோம். எங்களை பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பனரில் இருந்து நீக்கியிருக்கிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இனியாவது கேப்டன் திருந்தட்டும். இனியாவது கட்சியை காப்பாற்றுவதற்கு திமுகவுடன் சென்று உடன்பாடு வைத்துக்கொண்டு, கட்சியை காப்பாற்றட்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். 

கேள்வி: உங்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன?

பதில்: நேற்று செய்தியாளர்களை சந்தித்தப் பிறகு, தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். உண்மையாகவே தேமுதிக நல்ல இடத்தை பிடிக்க வேண்டும். கேப்டன் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களுடன் சென்னையில் சந்திக்கப்போகிறேன். அப்போது அவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்து அறிவிக்கிறேன்.

கேள்வி: விஜயகாந்த் மறைமுகமாக அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறாரா?

பதில்: நேரடியாக அந்த குற்றச்சாட்டை வைக்க முடியவில்லை என்றாலும்கூட, அவர் நடந்துகொள்ளும் முறை, வைகோவோடு வைத்திருக்கின்ற இந்த கூட்டணி, இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா வருவதற்கு இவர் ஆதரவு கொடுக்கிறார் என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம்.

கேள்வி: நேற்று நீங்கள் கடிதம் கொடுத்ததாக சொல்கிறீர்கள். ஆனால் தேமுதிக தலைமை வரவில்லை என்கிறதே? 

பதில்: கலெக்டருக்கு ஒரு மனு கொடுத்தால், ரிசிவ்டு என்று ஒரு ஒப்புகைச் சீட்டு வாங்கி வர முடியும். இவர்கள் கொடுத்த கடிதத்தை (கூட்டணி வைத்ததை மாற்றுமாறு) நான் கேப்டனிடம் தனிப்பட்ட முறையில் கொடுத்தேன். அவரிடம் நான் கொடுத்த கடிதத்துக்கு அத்தாட்சி கொடுங்கள் என்று கேட்க முடியுமா. 

கேள்வி: விஜயகாந்த் முதலமைச்சராக வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்களா. உங்களது நிலைப்பாடு என்ன.

பதில்: கேப்டன் முதலமைச்சராக வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டனும் நினைக்கிறார்கள். நாங்களும் அதைத்தான் நினைக்கிறோம். 2011ல் எதிர்க்கட்சித் தலைவர். 2016ல் அதிகாரத்தில் பங்கு. 2021ல் கேப்டன் முதல் அமைச்சர் என்பதுதான் எங்களின் இலக்கு. இதை அவரே ஒப்புக்கொண்டார். இப்போது ஜெயிக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். இதற்கு ஆதாரமெல்லாம் காண்பிக்க முடியாது.

ad

ad