புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அச்சுறுத்தல் அரசாங்க அதிபரின் அடக்குமுறையா? -சிறிநேசன்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொலீசாரை கொண்டு ஊடகவியலாளர் நிலாந்தனை விசாரணை செய்தமையானது இந்த நாட்டில் மீண்டும்
பத்திரிகையாளர்களை மிரட்டுகின்ற ஒடுக்குகின்ற பயமுறுத்துகின்ற அடக்குமுறை கலாசாரம் ஏற்படுத்தப்படுகின்றா? என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறினேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்களை பொலீஸ் நிலையத்தில் கொடுத்து விசாரணை செய்தமை தொடர்பாக ஊடகங்களக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
அண்மையில் ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் மாவட்டத்தில் நடைபெற்ற சில இடமாற்றங்கள் தொடர்பாக குறிப்பாக பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பாக தன்னுடைய பத்திரிகை ஆழுமையை பயன்படுத்தி விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவந்திருந்தார்.
விமர்சனத்தை தெரிவித்ததற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக பொலீசாரிடம் புகார் செய்து அதனை முறைப்பாடக பதிவு செய்து ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்களை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து ஒரு வித்தியாசமான பாணியில் விசாரணைகளை மேற்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலமைகள் காணப்படுகின்றது.
இன்று ஊடகசுதந்திரம் தகவல் அறியும் சுதந்திரங்கள் பற்றியெல்லாம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் ஒரு வகையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது.
இப்படியான விடயங்களை செய்கின்றபோது எமக்கு பயம் ஒன்று ஏற்படுகின்றது அதாவது கடந்த கால ஆட்சியின் ஆரவாரங்கள் அல்லது அடங்கி கிடந்த விடயங்கள் படிப்படியாக வெளிவரத்தொடங்குகின்றதா என்று சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால ஆட்சிக்கு இதுபொறுத்தமானது இன்றைய நல்லாட்சிக்கு இது பொறுந்ததது.
அரசாங்க அதிபரின் இந்த செயற்பாடானது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உண்மையில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய விடயமாக இருந்திருந்தால் அல்லது அவருக்கு உண்மைக்கு புறம்பான விடயமாக இருந்திருந்தால் அவர் உடனடியாக இப்படியான விடயம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதை பத்திரிகையின் வாயிலாக மாற்று அறிக்கை ஒன்றின் ஊடாக அதனை விமர்சித்திருக்கலாம் அல்லது மாற்றுக் கருத்தினை வெளியிட்டிருக்கலாம். அதனை விடுத்து இதனை அடக்குகின்ற ஒரு நிலைப்பாட்டில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவரை கொண்டுவந்து விசாரணை செய்திருக்கின்ற தன்மையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளை ஒரு வித்தியாசமான பாணியில் இது நல்லாட்சிக்கு உகந்ததாக அமைந்திருக்கின்றதா என்று யோசிக்கவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
ஏனென்றால் அவருடைய செயற்பாடுகள் பற்றி இன்று மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு உயர்அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களையும் ஒன்றினைத்து ஒற்றுமைபடுத்தி அவர்களை கூட்டாக இணைத்துக்கொண்டு செல்வதாக இருந்தால் சக ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையும் நம்பிக்கையையும் எற்படுத்துவதாக இருந்திருக்கும்.
அவர்களுக்கு மத்தியில் முரன்பாடுகளை உருவாக்குவதோ அல்லது பிரதேச செயலாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்து கூறி பிரித்தாழும் தந்திரங்களை பயன்படுத்தி அவர்களை கையாழுகின்ற தன்மை ஏற்புடையதாக இல்லை. பிரதேச செயலாளர்கள் மத்தியில் தவறுகள் இருக்குமாக இருந்தால் அல்லது தவறான செயற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை கையால்வதற்கு சில உத்திகள் உபாயங்கள் நிர்வாகத்தில் உண்டு.
அதனைவிடுத்து அவர்களை ஒரு விதத்தில் சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக பந்தாடுகின்ற தன்மை காணப்படுமாக இருந்தால் அதனை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மக்களின் பிரதிநிதி என்றவகையில் இப்படியான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. நல்லாட்சிக்கு முரணாக விரோதமாக அரசாங்க அதிகாரிகள் நடந்துகொண்டாலும் சரி அல்லது அரசியல் வாதிகள் நடந்துகொண்டாலும் சரி அல்லது பிரதேச செயலாளர்கள் நடந்துகொண்டாலும் யாராகவிருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம்.
இன்று பல முற்போக்கு சிந்தனையாளர்கள் பல தமிழ் சிங்கள ஆங்கில முற்போக்கு சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் இந்த விடயம் சம்பந்தமாக பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் ஏன் மௌனியாக இருக்கின்றீர்கள் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அந்தவகையில் முளையில் இந்த விடயத்தை கிள்ளி எரியாவிட்டால் இது விஸ்வரூபம் எடுத்து மீண்டமொரு காட்டாட்சி நிர்வாகத்தை கொண்டுவந்துவிடும்.
எனவே எமது மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஊடகவியலாளர்களை முறைப்பாடு செய்து விசாரணைசெய்து அவர்களை மிரட்டுகின்ற செயற்பாடுகளை விடுத்து அதற்கு எதிரான கருத்துக்களை பத்திரிகை வாயிலாக தெரிவித்திருக்கவேண்டும் கருத்தினை கருத்தினால் எதிர்கொள்கின்ற ஜனநாயக கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவேண்டுமெ தவிர கருத்தினை கருவியினால் எதிர்கொள்கின்ற கலாச்சாரத்திணை கைவிடவேண்டும் அந்த கலாச்சாரம் கடந்த ஆட்சியில் இருந்தது அதனை இந்த ஆட்சியில் அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதியை பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றது பிரதமரைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றது அமைச்சர்களைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றது ஆனால் அவர்கள் எந்தவோரு ஊடகவியலாளர்களையும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவோ அல்லது விசாரணை செய்ததாகவோ நீதிமன்றத்தில் நிறுத்தியதாகவோ எனக்கு தகவல்கள் இல்லை.
ஆனால் மட்டக்களப்பில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்களை அரசாங்க அதிபரினால் முறைப்பாடு செய்யப்பட்டு பொலீசாரினால் விசாரணை செய்யப்பட்ட செய்தியானது சற்று நிதானமாக சிந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் இப்படியான ஊடக அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் மிரட்டல்கள் ஏற்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் கட்டமைக்கப்படுகின்றதா என்பதனை சிந்திக்கவேண்டியுள்ளது.
எனவே அரசியல் வாதிகள் ஒரு சிலரை தனது கைகளுக்குள் கையகப்படுத்திக்கொண்டு செயற்படகின்ற தன்மையினை கூடியவரைக்கும் நிர்வாக இயந்திரத்தை இயக்குகின்ற தலைவர்கள் கைவிடவேண்டுமென்ற ஜனநாயக கருத்தினை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்

ad

ad