புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

கோபி தொகுதியில் குஷ்பு போட்டி: காங்கிரசார் மத்தியில் பரபரப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், கோபி தொகுதி அ.தி.மு.க. வின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு, ஆறு முறை வெற்றியை பறித்த, (1996-தவிர) முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், ஏழாவது முறையாக மீண்டும் களம் காண்கிறார்.

அதே சமயம் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு, தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், இங்கு மட்டும்தான் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனின் சொந்த மாவட்டம் இது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில், கோபி தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற, இளங்கோவன் தரப்பு, தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியதால், தங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக, அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பலமான மற்றும் தமிழக அளவில் பிரபலமான ஒரு நபர், இங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று, காங்கிரஸ் கட்சியில் பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக குஷ்பு பெயரை அக்கட்சியினர் உச்சரிக்க தொடங்கியுள்ளனர்.

குஷ்புவின் கணவர் சுந்தர், ஈரோட்டை சேர்ந்தவர். இதனால் நான் ஈரோட்டின் மருமகள் என பல மேடைகளில் குஷ்பு பேசியுள்ளார். மேலும், கோபி சுற்றுப்பகுதியில் படப்பிடிப்புகளுக்கு, குஷ்பு பல இடங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள மக்களுக்கு நல்ல அறிமுகம் உள்ளது என்ற காரணங்களால், கோபி தொகுதியில் குஷ்பு களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
 

ad

ad