புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2016

சமஷ்டி தொடர்பில் சம்பந்தனுக்கு ஓமல்பே சோபித தேரர் பதிலடி

நாட்டிற்குள் சமஷ்டி நிர்வாகத்தை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின்
தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஓமல்பே சோபித தேரர் இதனை கூறியுள்ளார்.
சமஷ்டி நிர்வாகத்தை நாட்டிற்குள் ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார்.
கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பத்தை தமது மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தாது, மீண்டும் சிக்கலை நோக்கி செல்லும் நடவடிக்கைகளில் இரா.சம்பந்தன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் இருப்புக்காகவே தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad