புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம்


இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை தடியடியில் அவரது ஆதரவாளர்கள் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
குடியுரிமை தருவதாக கூறிய ஜனநாயகம் இதுதானா? முன்னிலை சோசலிக் கட்சி பாரிய போராட்டம்
முன்னிலை சோசலிக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரட்னவின் குடியுரிமையை வலியுறுத்தி கொழும்பில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் படி குமார் குணரட்னம் தனது குடியுரிமைக்காக அரசிற்கு பல வழிகளில் விண்ணப்பித்தும் அவருக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad