புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2016

நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

பிரபல நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை
காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:–
பிரபல நடிகையான கே.ஆர்.விஜயாவின் மகள் ஹேமலதா. இவர் கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
தற்போது இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இதனால் ஹேமலதா மட்டும் வீட்டில் தனியாக உள்ளார். இந்நிலையில் ஹேமலதா செல்போனுக்கு, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரான
கதிர்வேல் என்பவர் தொடர்பு கொண்டு, நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன்.
நீங்கள் இடங்கள் வாங்க என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
இதையடுத்து நிலம் சம்பந்தமாக பேசுவதற்கு ஹேமலதாவின் வீட்டுக்கு கதிர்வேல் வந்துள்ளார்.
அப்போது ஹேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கதிர்வேல், அவரிடம் ரியல் எஸ்டேட் குறித்து மட்டும் பேசாமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
அத்துடன் அடிக்கடி ஹேமலதாவின் செல்போனுக்கு, திருமணம் செய்து கொள்வதாக கூறி எஸ்.எம்.எஸ். அனுப்பியும், தொலைபேரியில் பேசியும் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அவரை ஹேமலதா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல், அவரை மிரட்டியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, கதிர்வேல் தன்னிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதாக ஹேமலதா, கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கதிர்வேலை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

ad

ad