புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2016

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: 'ஜனனம்' வார இதழ் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று வார இதழ் ஒன்று நடத்தி
வரும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. முதல கட்டமாக தேர்தல் ஆணையம் இறுதிகட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக தமிழக தேர்தல் ஆணையம் 28ம் தேதி 8 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.

ஒரு பக்கம் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பாமக சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் அதன் பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, மக்கள் நலக் கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் வாசன், காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் இளங்கோவன், குஷ்பு, பாஜக சார்பில் அதன் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஹெச் ராஜா ஆகியோரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்பு நடத்தி இவர் ஆட்சிக்கு வருவார், அவர் வருவார் என்று தங்களது பணிகளை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. வார இதழ்கள் வரிசையில் தற்போது 'ஜனனம்' என்ற இதழ் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேரிடம் தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் தனது கருத்துக்கணிப்பினை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இது வரை 63 தொகுதிகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக 47 இடங்களையும், திமுக 6 இடங்களையும், அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் இழுபறியான நிலையில் 10 தொகுதிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.
தேர்தல் நெருங்கி வருகிறதே தவிர இன்னும் யார் யாருடன் கூட்டணி, தேர்தல் தேதி அறிவிப்புகள் மற்றும் ஆளும் கட்சியான அதிமுக மக்களை கவரும் வண்ணம் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் போகும் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் என ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. அதுபோக தேர்தல் களத்தில் மக்களுக்கு அரசியல் கட்சிகள் அள்ளி வீசப் போகும் வாக்குறுதிகள், இலவசங்கள் என நிறைய உள்ள நிலையில் தற்போது நடத்தப்படும் கருத்துக்கணிப்புக்கள் புத்தகங்களையும், பேப்பர்களையும் படிக்கும் மக்களிடையே பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால் கடைசி கட்ட முடிவுகள், மாறுதல்கள் என நிறைய உள்ளன.

ad

ad