புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2016

சுவிசில் நால்வர் கொலை .குற்றவாளி ருப்பர்ச்வில் 33வயதான ஏ ஜூனியர் அணி பயிற்சியாளர்

சுவிட்சர்லாந்து நாட்டில் நால்வரை கொலை செய்த நபரை 5 மாதங்களுக்கு பிறகு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற பகுதியில் வசித்து வந்த 48 வயதான தாயார், அவருடைய 19 மற்றும் 13 வயதான இரு மகன்கள் மற்றும் மூத்த மகனின் 21 வயதான காதலி ஆகிய நான்கு பேர் கடந்த டிசம்பர் 21ம் திகதி கொடூரமாக கொல்லப்பட்டனர்.
சுவிஸை நாட்டையே அதிர வைத்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு கிடைக்காமல் திண்டாடிய பொலிசார் ‘தகவல் தருபவர்களுக்கு 1,00,000 பிராங்க் சன்மானமாக வழங்கப்படும்’ என அறிவித்தனர்.
ஆனால், ஆர்கவ் மாகாணம் முழுவதும் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்த நிலையில், கொலையாளி Rupperswil நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளது பொலிசாருக்கு கடந்த வாரம் தான் தெரியவந்துள்ளது.
நகரில் ஒவ்வொரு வீடுகளையும் சோதனை செய்து வந்த பொலிசார், 33 வயதான நபர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது, அவரது பையில் ‘இரும்பு கம்பிகள், பிளாஸ்ட்டிக் டேப் மற்றும் கயிறுகள்’ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனெனில், நான்கு பேர் கொல்லப்பட்டபோது அவர்கள் அனைவரும் இரும்பு கம்பிகள் மற்றும் பிளாஸ்ட்டிக் டேப்பால் அவர்களது வாய் அடைக்கப்பட்டு இருந்தது தற்போது பொலிசாரின் சங்தேகத்தை அதிகப்படுத்தியது.நபரை உடனடியாக கைது செய்த பொலிசார், அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்துள்ளனர்.
பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணையின் முடிவில் ‘நான்கு பேரை கொலை செய்ததை’ அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.சர்வசாதரனமாக்  கொலை நடந்த இடத்துக்கு  அண்மையிலேயே சுற்றி  திரயுந்துள்ளார்  . பயிற்ச்சி வழங்கி வந்துள்ளார் 
உண்மை வெளியானதை தொடர்ந்து, அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதே பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கொலையாளி கால்பந்து பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ம் திகதி கொலை நடந்த வீட்டிற்கு வெளியே மறைந்திருந்த அந்த நபர், கொலை செய்யப்பட்ட தாயாரின் கணவர் வெளியே செல்லும் வரை காத்திருந்துள்ளார்.
பின்னர், அவர் வெளியே சென்றதும் திடீரென வீட்டிற்குள் நுழைந்த அவர், தாயாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது இரு மகன்கள் மற்றும் இளம்பெண்ணை இருக்கையில் அமர வைத்து கயிற்றால் கட்டி போட வைத்துள்ளார்.
அனைவரும் கட்டிப்போட்ட பின்னர், ஏ.டி.எம் மையத்திலிருக்கும் பணம் முழுவதையும் எடுத்து வருமாறு கொலையாளி மிரட்டியுள்ளார்.
வேறு வழியின்றி மகன்களை விட்டு தாயார் மட்டும் சென்று பணம் எடுத்து வந்துள்ளார். பின்னர், பணம் கிடைத்தவுடன் அவரையும் சேர்த்து இருக்கையில் கட்டியுள்ளார்.
பணம் கிடைத்துவிட்டாலும், தான் பொலிசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக நால்வரின் கழுத்தை அறுத்து, பின்னர் வீட்டிற்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியதாக அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களாக பொலிசாரை திணர வைத்த கொலைக்கு காரணமான அந்த நபரை சில நாட்களில் நீதிமன்றத்தில் நிறுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.தற்போது லேன்ச்பெர்க் சிறையில் உள்ளார் 

ad

ad