புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2016

42ஆவது ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம்

*எதிர்வரும் சனிக்கிழமை ஜப்பானியப் பிரதமருடன் இருதரப்பு சந்திப்பு
* 42ஆவது ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன நாளை பிற்பகல் ஜப்பான் புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் ஊடாக ஜப்பானின் நகோயா விமான நிலையத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து மாநாடு நடைபெறும் ஷிமா கங்கோ ஹோட்டலைச் சென்றடைவார் .
உலகில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி 7 உச்சிமாநாடு நாளை மறுதினம் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கம×ன், கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ , ஜேர்மனி ஜனாதிபதி அஞ்சலா மேர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹொலண்டே, இத்தாலியப் பிரதமர் மெட்டியோ ரின்ஸி ஆகியோருடன் மாநாட்டை நடத்தும் ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் இந்த மாநாட்டில் அங்கத்தவ பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.
ஜி 7 அமைப்பில் அங்கத்தவம் வகிக்கும் நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களைத் தவிர, இம்முறை விசேட விருந்தினர்களான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வியட்நாம் பிரதமர் நுயேன் ஸுவான் புக்கும் கலந்துகொள்கின்றமை விசேட அம்சமாகும்.
உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுடன் கைலாகுடனான முகமன் கூறல் இடம்பெறுவது வழமை. எனினும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இருதரப்புச் சந்திப்பு நடைபெறுவது தொடர்பில் தற்போதுள்ள நிகழ்ச்சி நிரலில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. உச்சிமாநாட்டை நடத்தும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேக்கும் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்புச் சந்திப்பு நகோயாவிலுள்ள மரியட் ஹோட்டலில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

ad

ad