புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2016

ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் வாங்கினார் நெய்மர்

பிரேசில் உதைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெய்மர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த பெப்ரவரி மாதம் சா பாலோ நகர நீதிமன்றம் நெய்மரின் ரூ.310 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் ஷெஸ்னா 680 ரக விமானத்தை பிர் பார்டிசிபகோயஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அடமானமாக இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக பிரபல செய்தித்தாள் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் வரை பயணம் செய்யக்கூடிய இந்த ஷெஸ்னா 680 ரக விமானம் நடுத்தர வணிக ஜெட் வகையை சேர்ந்தது.

ad

ad