புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

திருவாரூரில் 61, 212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி



தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள்
எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதல் திமுக தலைவரும் வேட்பாளருமான மு.கருணாநிதி 61, 212 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தோற்கடித்தார்.
கடந்த 2008 -ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியுடன் திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புக்கு பின்னர் திருத்துறைப்பூண்டி தொகுதி மட்டுமே தனித்தொகுதியாக உள்ளது.

202016 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விவரம்:
மு.கருணாநிதி திமுக
ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் அதிமுக
பி.எஸ்.மாசிலாமணி இந்திய கம்யூ
ஆர். சிவக்குமார் பாமக
என். ரெங்கதாஸ் பாஜக
தென்றல் சந்திரசேகரன் நாம் தமிழர்

1977 - 2016 வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்: 
1977 தாழை மு.கருணாநிதி திமுக
1980 M.செல்லமுத்து இ.கம்யூ
1984 M.செல்லமுத்து இ.கம்யூ
1989 V.தம்புசாமி இ.கம்யூ
1991 V.தம்புசாமி இ.கம்யூ
1996 A.அசோகன் திமுக
2001 A.அசோகன் திமுக
2006 உ. மதிவாணன் திமுக
2011 மு.கருணாநிதி திமுக - 109014
2016 மு.கருணாநிதி - 1,12,196

ad

ad