புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2016

தினமலர் - நியூஸ் 7 தேர்தல் கணிப்பு: தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு இறுதி முடிவுகள் வெளியீடு

தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்து கணிப்பு முடிவு 

தினமலர் - நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 22-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 1,000 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. மொத்தம், 2 லட்சத்து 3 ஆயிரத்து 341 வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

கருத்து தெரிவித்தவர்களில் 18 வயதில் இருந்து 20 வயது வரை 13.20 சதவீதம் பேர்களும், 20 வயதில் இருந்து 40 வயது வரை 52.60 சதவீதம் பேர்களும், 40 வயதில் இருந்து 60 வயது வரை 27.40 சதவீதம் பேர்களும், 60 வயதுக்கு மேல் 6.70 சதவீதம் பேர்களும் ஆவார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி, அ.தி.மு.க. 52 இடங்களிலும், தி.மு.க. 108 இடங்களிலும், பா.ஜ.க. - பா.ம.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

72 தொகுதிகளில் இழுபறி நிலை

மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 72 தொகுதிகளில் இழுபறி நிலை காணப்படுகிறது. இந்த தொகுதிகளில் முதல் 2 இடங்களில் உள்ள கட்சிகளுக்கு இடையே உள்ள ஓட்டு சதவீத வித்தியாசம், 5 சதவீத புள்ளி அளவுக்குத்தான் உள்ளது.

சில தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகள் முதல் 2 இடங்களில் உள்ள கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மிக நெருக்கமாக ஓட்டு சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளன. 

கருத்துக் கணிப்பு நடைபெற்ற காலக்கட்டத்திற்குப் பின், அதாவது, மே 1-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் பிரசாரத்தினால் ஏற்படும் தாக்கம், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியான பின் ஏற்பட்டுள்ள நிலை போன்றவற்றால், இந்த 5 சதவீத ஓட்டு புள்ளி வித்தியாசம் மாற வாய்ப்பு உள்ளது என்றும் இறுதி முடிவுகள் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினமலர் - நியூஸ் 7 தேர்தல் கணிப்பு: தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு இறுதி முடிவுகள் வெளியீடு

ad

ad