புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

சுவிஸ் குமாரை தாயுடன் அழைத்துச் சென்ற புலனாய்வாளர்கள்!

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகப்படும் சுவிஸ் குமாரை புலனாய்வாளர்கள் என்றுகூறிக் கொண்டு வந்தவர்களே
அழைத்துச் சென்றனர் என அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர் நீதிமன்றுக்கு வெளியில் நின்றிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவரின் தாயார் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய மகனுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த வருடம் மே மாதம் எமது வீட்டுக்கு வந்த சிலர் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்தி எனது மகனை அழைத்துச் சென்றனர்.
எனினும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வைத்தியசாலையில் சிகிச்சை முடித்துவிட்டு ஊருக்குள் வந்தால் தன்னை தாக்குவார்கள் என்ற அச்சத்தினாலே சுவிஸ்குமார் கொழும்புக்கு சென்றார்.ஆனால் எல்லோரும் என்னுடைய மகன் தப்பி சென்று விட்டதாக கூறுகின்றார்கள்.
என்னுடைய மகன் தப்பிச் செல்லவில்லை. இந்தக் கொலைக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சுவிஸ் குமார் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தெளிவானதும் சரியானதுமான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு, இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு, ஊர்காவற்றுறை நீதவான் எம். எம்.றியால் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவொருபுறமிருக்க, மாணவியின் தாயாருக்கு சந்தேக நபர்களின் குடும்பத்தினரிடத்தில் இருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற வழக்கின் போது மன்றத்தில் சட்டத்தரணி ஊடாக மாணவியின் தாயார் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யுமாறு நீதிபதி தெரிவித்துள்ளதுடன், இவ்வழக்கினை சட்டதிட்டங்களின்படி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

ad

ad