புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக்கிய அமைச்சர்களின் பதவி பறி போகும் அபாயம்

அடுத்து வரும் சில தினங்களில் இலங்கையின் அமைச்சரவையில் மறுசீரமைப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது ரவி கருணாநாயக்கவின் நிதியமைச்சர் பதவி, அர்ஜுன ரணதுங்கவின் துறைமுகங்கள் அமைச்சர் பதவி, துமிந்த திஸாநாயக்கவின் விவசாய அமைச்சர் பதவி, விஜயதாஸ ராஜபக்சவின் நிதி அமைச்சர் பதவி மற்றும் கயந்த கருணாதிலக்கவின் ஊடக அமைச்சர் பதவி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது உள்ள அமைச்சு பதவிகளை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் மாற்றி கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிலையில், அதற்கமைய விவசாயம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சுக்கு இடையில் மாற்றம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரவி கருணாநாயக்கவை நிதி அமைச்சு பதவியில் இருந்து நீக்கினால் அந்த பதவி கபீர் ஹாஷீம் அல்லது ஹர்ஷ டி சில்வாவுக்கு கிடைக்கப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சர் பதவியை வழங்குவதாக இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளதாக தெரிய வருகிறது.
அதற்கமைய இறுதியாக இடம்பெற்ற மறுசீரமைப்பிற்கு முன்னர் நிதி அமைச்சின் கீழ் உள்ள பல அரசாங்க நிறுவனங்களை கபீர் ஹஷீமின் அரச நிறுவன அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் இரண்டு கட்சியிலும் நியமிக்கப்படும் ஒப்பந்தத்திற்கமைய அளவான அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad