புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2016

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ஜுரிமார்! ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்குழுவில் சர்வதேச ஜுரிமாரையும் இணைத்துக் கொண்டால் மட்டுமே
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய மஹிந்த அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி. சலுகையை கடந்த 2006ம் ஆண்டில் இடைநிறுத்தியது.
இதன் காரணமாக இலங்கையின் ஆடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதித் தொழில் துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது.அத்துடன் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளையும் இழந்திருந்தார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் இது தொடர்பில் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் சிங்கள செய்திப் பத்திரிகை ஒன்றில் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணப் பொறிமுறையில் சர்வதேச ஜுரிமார் இணைத்துக் கொள்ளப்பட்டால் மாத்திரமே ஜீ.எஸ்.பி. சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் முக்கிய அமைச்சர் ஒருவர் அண்மையில் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.
இதன் பிரதிபலனாக எதிர்வரும் ஜுன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைக் கட்டமைப்பில் சர்வதேச ஜுரிமார் இணைத்துக் கொள்ளப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு ஒன்று நீண்ட நாட்களுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad