புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

வட மாகாண சபை அமர்வு :உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள்

வட மாகாண சபையின் 52ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிலையில், உறுப்பினர்களுக்கு இடையில் கடும்
வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக நீதிமன்றத்தினால் அறவிடப்படும் தண்டப்பணம் உள்ளிட்ட கட்டணங்களை, உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்குவதற்கான நியதிச் சட்டம் மாகாண சபையால் உருவாக்கப்படவில்லை எனும்போது, நீதிமன்றத்தால் சேகரிக்கப்பட்ட பணம் எதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதென, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜாவால் வினா எழுப்பப்பட்டுள்ளது.
அத்தோடு, மர நடுகை மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மரக்கன்றுகளின் விபரங்கள், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற உழவர் திருவிழாவுக்கு செலவழிக்கப்பட்ட தொகை, காணிப்பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து வினா எழுப்பப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன.
அத்தோடு, முதலமைச்சர் மற்றும் வட மாகாண அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் திருத்தம் மேற்கொண்டு வருதல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது 

ad

ad