புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2016

இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொது செயலாளர் ராஜீவ் மேத்தா, நல்லெண்ண தூதராக செயலாற்ற ஏ.ஆர். ரஹ்மான் ஒப்புக் கொண்டதை வரவேற்பதாகவும், ஒலிம்பிக் அமைப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒலிம்பிக் விளையாட்டுக்களை பிரபலப்படுத்தவும் அவர் உதவுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, நல்லெண்ண தூதராக செயல்பட ஒப்புக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், தனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடமிருந்து எந்த முறையான அழைப்பும் வரவில்லை என ரஹ்மான் பேட்டியளித்திருந்தார்.
இதனையடுத்து அவரைத் தொடர்பு கொண்ட, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக செயல்பட கேட்டுக் கொண்டனர். இதற்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான், ஒலிம்பிக் தங்க பதக்க வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும், இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர்.

ad

ad