புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2016

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது மக்கள் நலக் கூட்டணி

மிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது மக்கள்
நலக் கூட்டணி. 'ரெய்டு தகவலை முன்கூட்டியே தி.மு.க, அ.தி.மு.கவிடம் சொல்கிறார்களோ என சந்தேகப்படுகிறோம்' என்றும் அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளி குங்குமச் சிமிழ், வெள்ளி மூக்குத்தி, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் விநியோகம் நடப்பதாக, இன்று காலையில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், " ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை" எனக் கொந்தளிக்கிறார் சி.பி.எம் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
அவர் நம்மிடம், " இன்றைக்கு நன்னிலம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்தவர்கள், வீட்டுக்கு ஒரு வெள்ளி மூக்குத்தி கொடுத்துள்ளனர். எங்கள் தோழர்கள் அதிரடியாக அந்த இடத்திற்குச் சென்று, பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். ' யாரையும் எங்களால் பிடிக்க முடியவில்லை'  என அதிகாரிகள் கூறுகிறார்கள். இதேபோல், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அ.தி.மு.க ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. தி.மு.கவினரோ ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கின்றனர். உச்சகட்ட விநியோகம் நடக்கிறது. எதைப் பற்றியும் ஆணையம் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை" என ஆதங்கப்பட்டார். 

நன்னிலம் தொகுதியில் பிரசாரத்தில் இருந்த சி.பி.எம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் நம்மிடம், " தலித் பகுதி வாக்காளர்களுக்கு வெள்ளி குங்குமச் சிமிழ், வெள்ளி மூக்குத்தி என வாரியிறைக்கிறது அ.தி.மு.க. தங்கம், வெள்ளி பொருட்களைக் கொடுத்து தலித் மக்களின் வாக்குகளை விலை பேசுகிறார்கள். மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் தன்மைக்கு ஏற்ப 300, 500, 1000 ரூபாய் என பாகுபாடில்லாமல் தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தை வாரியிறைக்கிறது. நாங்கள் புகார் தெரிவித்தால், ஏதோ சடங்குக்கு வருவதுபோல் அதிகாரிகள் வருகிறார்கள்.
'பிடிப்பதற்குள் தப்பியோடிவிட்டார்கள்' என சிரித்துக் கொண்டே சொல்கின்றனர். ரெய்டுக்கு வருவதற்கு முன்பே தகவலை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டார்களோ? என சந்தேகப்படுகிறோம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பண விநியோகம் தீவிரமாக நடக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. எங்கள் புகார்களை ஒருபொருட்டாகவே பறக்கும்படை அதிகாரிகள் எடுத்துக் கொள்ளவில்லை" என வேதனைப்பட்டார். 

இன்னும் ஐந்து நாட்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடைசி நிமிட ஆட்டத்தை தி.மு.கவும் அ.தி.மு.கவும் தொடங்கிவிட்டன. தேர்தல் சந்தையில் 500 ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் வாக்குகள் விலை பேசப்பட்டு வருகிறது. 'தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை' என ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் ஆணையத்திற்கு அழகா? 

ad

ad