புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மானத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது-சிறீக்காந்தா

மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மானத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் அல்லது அருகதை ஆளுநருக்கு கிடையாது.

அரசியல் சாசன பொறுப்பில் இருந்து மீறிய ஜனாதிபதி உடனடியாக மீளப்பெறவேண்டும் என ரெலோவின் செயலாளரும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மாணத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் அல்லது அருகதை ஆளுநருக்கு கிடையாது. அரசியல் சாசன பொறுப்பில் இருந்து மீறிய ஜனாதிபதி உடனடியாக மீளப்பெறவேண்டும் .
ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஓர் ஆளுநர் 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட 13வது அரசியல் சாசனப்படி  ஓர் சம்பிரதாய நியமணம். ஓர் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படி செயல்படுபவர்.
ஆனால் வடக்கு ஆளுநர் நம் மாகாணசபையை விமர்சித்துள்ளார். முதலமைச்சரும் மாகாணசபையும் இணைந்து கோரிய அடிப்படை அரசியல் முறைமையை விமர்சித்துள்ளார்.
வட மாகாணத்தினை மயான பூமியாக கான விளைகின்றார் முதலமைச்சர் என்ற கருத்துப்பட ஆளுநர் கூறியது ஓர் பாரதூரமான விடயம். மாகான சபை கோரிய ஓர் தீர்வினை விமர்சிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.
இதனை தானாக பேசினாரா அல்லது இவ்வாறு பேச வைக்கப்பட்டாரா என்பதும் ஓர் விடயாம் . எதுவாக இருப்பினும் ஆளுநர் இவ்வாறு பேசுவது மக்களின் உணர்ச்சிகளிற்கு விரோதமானது. இதே நேரம் கொழும்பில் மற்றுமோர் அரசியல்வாதி விஐயதாசவும் விமர்சித்துள்ளார்.
அவர் அரசியல்வாதி அவருக்கு உரிமையுண்டு. அடுத்தது பத்திரிகைகளிற்கு மட்டுமே அந்த உரிமையுண்டு.
ஆளுநர் விமர்சித்தது 13வது சரத்தின் 154ஆவது உறுப்புறுமையின் ஆ வில் 4வது உப பிரிவின் பிரகாரம் இது ஓர் கடமை மீறல் . எனவே அரசியல் சாசனப்படி இதனை அனுமதிக்க முடியாது.
அத்துடன் ஆளுநர் தொடர்ந்தும் இங்கு ஆளுநராக இருக்க அனுமதிக்க முடியாது . என்பதனால் இவரை ஜனாதிபதி உடன் மீளப்பெறவேண்டும் என பகிரங்க அறிவித்தல் விடுக்கின்றோம்.
முதன் முதலாகபதவி ஏற்க வந்தபோது வரவேற்ற மக்கள் மீது முதுகில் குத்திய ஆளுநரை உடன் வீட்டை அனுப்ப வேண்டும்.
அல்லது மாகாணசபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான தீர்மானம் மூலம் அகற்ற முடியும். ஆளுநர் ஓர் விடயத்தினை மறந்து விட்டார் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உண்டு என்பதனை.
எனவே இவ்வாறு அரசியல் பேச விரும்பிய ஆளுநருக்கு அரசியலுக்கான வழியினை நாமே ஏற்படுத்திக்கொடுக்கின்றோம். அதாவது ஜனாதிபதி அவரை உடனடியாக மீளப்பெறவேண்டும். அல்லது நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். இந்த விடயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. என்றார்.

ad

ad